- Advertisement -
Homeபொழுதுபோக்கு17 நாட்களில் இன்னொரு இடியா? அந்த ஈரம் கூட இன்னும் காயவில்லையே? - இயக்குனர் கே...

17 நாட்களில் இன்னொரு இடியா? அந்த ஈரம் கூட இன்னும் காயவில்லையே? – இயக்குனர் கே பாக்யராஜ் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து அஞ்சலி!

- Advertisement -

இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ் இன்று காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 73. அவரது மறைவு தமிழ் சினிமா துறையினரையும் ரசிகர்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவில் திரைக்கதை மன்னன் என்ற புகழுக்கு சொந்தக்காரர் இயக்குனர் கே பாக்யராஜ். இயக்குனர் பாரதிராஜாவின் சிஷ்யராக இருந்தவர்.

கடந்த 10ம் தேதி தான் பாரதிராஜா மறைந்தார். அவரது மறைவுக்கு பின் 17 நாட்களில் அவரது சீடர் கே பாக்யராஜூம் மறைந்து விட்டார். குருவை தொடர்ந்து சீடனும் சென்று விட்டார். இயக்குனர் கே பாக்யராஜ் மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு செய்திருக்கிறார்.

- Advertisement -

அந்த பதிவில் கவிஞர் வைரமுத்து கூறியிருப்பதாவது, பதினேழே நாட்களில் இன்னோர் இடியா? பாரதிராஜாவைப் புதைத்த மண்ணின் ஈரம் இன்னும் காயவில்லை; அதற்குள் பாக்யராஜுக்குத் தீ மூட்டுவதா? என்ன கொடுமை இது!

பாக்யராஜ் ஈடு இணையற்ற கலைஞன். அவிழ்க்க முடியாத முடிச்சுகளைத் திரைக்கதையில் இட்டு அதைத் தான்மட்டுமே அவிழ்க்கத் தெரிந்தவர். அவர் உருவம் குறையென்று கருதப்பட்டது; அதிலும் வென்றார் அவர் குரல் குறையென்று கருதப்பட்டது; அதிலும் வென்றார்

- Advertisement -

நகைச்சுவைக்கென்று அவர் தனித்தடம் தயாரிப்பதில்லை; கண்ணின் பாகமான இமைபோல திரைக்கதையில் நகைச்சுவையை இழைத்து விடுவார்.80களில் தமிழ் சினிமாவை நோக்கி வந்த ஒவ்வொரு கிராமத்து இளைஞனுக்கும் நம்பிக்கை கொடுத்தவர் பாக்யராஜ்.

எம்.ஜி.ஆர் அவரைத் தன் வாரிசு என்றார் பாக்யராஜின் எதிர்பாராத மறைவு கலையுலகை அதிர வைக்கிறது. வாழ்ந்திருக்க வேண்டிய கலைஞன் அய்யா நீ! பாதியில் பயணப்பட்டு விட்டாயே! உன் உயிர் அமைதி அடைக! ஆழ்ந்த இரங்கல் அனைவருக்கும் என்று கவிஞர் வைரமுத்து அந்த பதிவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்