- Advertisement -
Homeபொழுதுபோக்குவாட்சப் அப்பில் திருமண அழைப்பிதழ் மகள் திருமணத்துக்கு வாங்க வாங்க என அழைக்கும் பிரபல இயக்குனர்...

வாட்சப் அப்பில் திருமண அழைப்பிதழ் மகள் திருமணத்துக்கு வாங்க வாங்க என அழைக்கும் பிரபல இயக்குனர் – இப்படி ஒரு சிக்கல் ஏற்பட இயக்குனர் வசந்தபாலன் தான் காரணமா?

- Advertisement -

ஒருவரது இல்லத்தில் சுபநிகழ்ச்சி என்றாலே அதற்கு அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்களை நண்பர்களை நெருக்கமானவர்களை நேரில் சென்று பத்திரிகை வைத்து அழைப்பது தான் வழக்கம். அதுவும் திருமணம் போன்ற விழாக்களுக்கு உறவினர்களை நண்பர்களை நேரில் பத்திரிகை வைத்து அழைப்பது தான் மரியாதையாகவும் இருக்கும்.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் மற்றும் குணச்சித்திர நடிகர் பாலாஜி சக்திவேல் மகளுக்கு வருகிற ஜூலை 12ம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் அவர் தனது உறவினர்கள் நண்பர்கள் நெருங்கியவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் திருமண அழைப்பிதழ் போட்டோவை அனுப்பி அவர்களை திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்து வரும் ஒரு தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் இயக்குனர் வசந்த பாலன்தான் என்றும் ஒரு தகவல் கசிந்துள்ளது. தமிழ் சினிமாவில் வெயில் அங்காடித்தெரு காவியத் தலைவன் அரவான் அநீதி ஜெயில் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் வசந்த பாலன். இவர் தற்போது நடிகர் அருள்நிதி நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் சூட்டிங் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற உள்ளது.

தொடர்ந்து 45 நாட்கள் இந்த படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த படத்தில் மிக முக்கியமான ஒரு கேரக்டரில் இயக்குனர் மற்றும் நடிகர் பாலாஜி சக்திவேல் நடிக்கிறார். சாமுராய் கல்லூரி காதல் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் பாலாஜி சக்திவேல். சமீப காலமாக திரைப்பட நடிகராக மாறி பல படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

குறிப்பாக அசுரன் லவ்வர் குடும்பஸ்தன் நந்தன் சொர்க்கவாசல் போன்ற பல படங்களில் பாலாஜி சக்திவேல் நடித்துள்ளார். அதேபோல் வசந்தபாலன் இயக்கத்தில் இப்போது இந்த புதிய படத்திலும் நடிக்கிறார். தொடர்ந்து 45 நாட்கள் பழனியில் சூட்டிங் என்ற நிலையில் அவர் தனது மகள் திருமணத்திற்கு உறவினர்கள் நண்பர்களுக்கு நேரில் சென்று திருமண அழைப்பிதழ் கொடுக்க முடியாத ஒரு நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால் சில பிளாப் படங்களுக்கு பிறகு வசந்தபாலன் இந்த படத்தை இயக்குவதால் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் பாலாஜி சக்திவேல் அவருக்கு முழுமையாக ஒத்துழைக்க சூழல் இருக்கிறது. அதனால் தனது மகள் திருமண அழைப்பிதழை வாட்ஸ் அப்பில் உறவினர்கள் நண்பர்களுக்கு அனுப்பி திருமணத்துக்கு வருமாறும் சென்னைக்கு வரும்போது நேரில் வந்து அழைக்கிறேன் என்றும் பாலாஜி சக்திவேல் கோரிக்கை விடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்