- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென ரூ. 8.39 கோடி சம்பள பாக்கி என கோர்ட்டுக்கு சென்ற பராசக்தி பட இயக்குனர்...

திடீரென ரூ. 8.39 கோடி சம்பள பாக்கி என கோர்ட்டுக்கு சென்ற பராசக்தி பட இயக்குனர் சுதா கொங்கரா – உண்மையில் நடந்தது என்ன? வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

- Advertisement -

நடிகர்கள் சிவகார்த்திகேயன் ரவிமோகன் ஸ்ரீலீலா அதர்வா உள்ளிட்டோர் நடித்த பராசக்தி என்ற படத்தை இயக்கியவர் சுதா கொங்கரா. பராசக்தி படம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. 1960களில் தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை மையமாக வைத்து இந்த படத்தின் கதைக்களம் இருந்தது.

ஆனால் பராசக்தி படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பையோ வசூலையோ குவிக்கவில்லை. இந்நிலையில் பராசக்தி பட இயக்குனர் சுதா கொங்கரா, இந்த படத்தை தயாரித்த டான் பிக்சர்ஸ் நிறுவனம் தனக்கு 8.39 கோடி ரூபாய் சம்பள பாக்கியை இதுவரை தரவில்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார்.

- Advertisement -

தனக்கு தர வேண்டிய சம்பள பாக்கி 8.39 கோடி ரூபாய் தொகையை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும். மேலும் தனது சம்பள பாக்கியை முழுமையாக டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வழங்கப்படும் வரை டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இதயம் முரளி திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் இயக்குனர் சுதா கொங்கரா அந்த மனுவில் கூறியிருக்கிறார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பராசக்தி படத்தின் தயாரிப்பு நிறுவனம் டான் பிக்சர்ஸ் வருகிற ஜூலை 8ம் தேதிக்குள் இதற்கு பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே டான் பிக்சர்ஸ் போன்ற மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் இப்படி இயக்குனருக்கு சம்பளம் தராமல் இழுத்தடித்ததா என்ற கேள்வியும் சந்தேகமும் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

- Advertisement -

ஆனால் உண்மையில் நடந்த சம்பவம் இதுதான். பராசக்தி படத்தை முதலில் புறநானூறு என்ற பெயரில் நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து அதில் சூர்யாவே நாயகனாகவும் நடிக்க இருந்தார். மதுரையில் சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்த நிலையில் இந்த படத்தில் இருந்து சூர்யாவும் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமும் விலகி விட்டது. அதன்பிறகு டான் பிக்சர்ஸ் நிறுவனம் என்ஓசி பெற 2டி தயாரிப்பு நிறுவனத்தை அணுகிய போது, புறநானூறு படத்தின் ப்ரீ புரடக்சன்ஸ் மற்றும் இயக்குனர் சுதா கொங்கரா சம்பள அட்வான்ஸ் என 6 கோடி ரூபாய் வரை செலவிட்டது தெரிய வந்தது.

அந்த தொகையை கொடுத்த பிறகுதான் பராசக்தி படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த வகையில் 2டி எண்டர்யெின்மென்ட் நிறுவனத்திடம் வாங்கிய ரூ. 6 கோடியில் ரூ. 4 கோடி வரை சுதா கொங்கரா சம்பள முன்பணமாக பெற்றிருக்கிறார். அந்த பணத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம்தான் தந்துள்ளது. அதை பராசக்தி படத்தின் சம்பள கணக்கிலேயே கொண்டு வராமல் சுதா கொங்கரா, 8.39 கோடி ரூபாய் பாக்கி என்று கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ள தகவலை, வலைப்பேச்சு ஜெ பிஸ்மி ஒரு வீடியோவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்