- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் இருக்கும் போது நீங்க எப்படி அந்த பேரை சொல்லலாம்? இயக்குனர் பாரதிராஜாவுக்கு கடிதம் எழுதி...

நான் இருக்கும் போது நீங்க எப்படி அந்த பேரை சொல்லலாம்? இயக்குனர் பாரதிராஜாவுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு கோபமாக கிளம்பிய கே பாக்யராஜ் – அப்படி என்னதான் நடந்தது?

- Advertisement -

இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணி செய்தவர் கே பாக்யராஜ். 16 வயதினிலே சிகப்பு ரோஜாக்கள் கிழக்கே போகும் ரயில் போன்ற பல படங்களில் பணிசெய்தார். மேலும் புதிய வார்ப்புகள் படத்தின் தனது சீடன் பாக்யராஜாவை ஹீரோவாக அறிமுகம் செய்தவரும் இயக்குனர் பாரதிராஜா தான்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் கே பாக்யராஜ் கூறியதாவது, கிழக்கே போகும் ரயில் படப்பிடிப்பு முடிந்த பிறகு நான் ஊருக்கு சென்றுவிட்டேன். சிகப்பு ரோஜாக்கள் படத்துக்கு கமல் ஸ்ரீதேவி கால்ஷீட் தந்து விட்டனர் என்று எனக்கு போன் செய்து அழைத்தனர். நானும் உடனே சென்னைக்கு திரும்பி வந்து விட்டேன்.

- Advertisement -

அப்போது ஒரு வீட்டுக்கு லொக்கேஷன் பார்க்க சென்ற போது பாரதிராஜாவுடன் புதிய ஆள் ஒருவர் இருந்தார். யார் இந்த ஆள் என எனக்கு யோசனையாக இருந்தது. என்னை பாரதிராஜா அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. ராமு இங்கு வந்து பாரு என்று அவரை அழைத்து ஏதோ காட்டினார். என்னால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. ராஜன் என்று சொல்லாமல் ராமு என்று சொல்கிறாரே என்று கலங்கிப் போய் விட்டேன்.

உடனே ஒரு பேப்பரில் நான் உங்களிடம் தொழில் கற்றுக்கொண்டேன். நான் போகிறேன் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு அங்கிருந்த கிளம்பி விட்டேன். ஜெமினி பிரிட்ஜ் வரை நடந்து வந்து 92 சி பஸ்சில் ஏறிவிட்டேன். என்னை காணாமல் தவித்துப் போன பாரதிராஜா பிறகு போன் செய்து என்னை அழைத்து வரச் செய்துவிட்டார்.

- Advertisement -

என்னை பார்த்ததும் ஒரு அறைக்குள் கூப்பிட்டு, என்னய்யா நீ எதுக்குய்யா லெட்டர் எழுதி வெச்சுட்டுப் போனே? என்று கோபமாக கேட்டார். நீங்க எதுக்கு ராஜன்னு என்னை கூப்பிடாம ராமுன்னு யாரையோ கூப்பிடறீங்க? என்னால அதை ஜீரணிச்சுக்க முடியலே. அதான் போனேன் என்று சொன்னேன். எனக்கு குடும்பத்துல ஆயிரம் பிரச்னை இருக்கும், மனைவியோட சண்டை. அந்த டென்சன்ல இருந்தேன் என்றார். அதெல்லாம் எனக்கு எப்படி தெரியும், என் பேர் சொல்லாம இன்னொருத்தன் பேர் சொன்னா எப்படி என்றேன்.

அப்போது இருவருமே ஆய் ஊய் என்று சத்தமாக பேசிக்கொண்டோம். ரெண்டு பேருக்குமே அப்போது அழுகையும் வந்துவிட்டது. அப்போது வெளியே இருந்த கமல்ஹாசன் சத்தம் கேட்டு ஏதோ பெரிய சண்டை நடக்கிறது என்று பதறிப் போய் ஓடிவந்து கதவை திறந்து பார்த்தார். அப்போது நாங்க 2 பேருமே அந்த அறைக்குள் கண்ணீருடன் நின்றிருந்தோம். அதை பார்த்து விட்டு ஏதோ அன்பு போராட்டம் போல இருக்கு என்று கமல் சொல்லிவிட்டு போனார் என்று இயக்குனர் கே பாக்யராஜ் அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்