தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜீத்குமார். கடந்த சில ஆண்டுகளாக கார் பந்தய வீரராகவும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த ஆண்டில் அவர் நடித்த குட் பேட் அக்லி படம் வெளியானது. அதன்பிறகு ஓராண்டுக்கு மேலாக அவர் கார் ரேஸில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
அஜீத்குமார் கார் ரேசிங் என்ற அணியின் தலைவராகவும் அவர் இருக்கிறார். தொடர்ந்து அஜீத்குமார் கார் ரேசிங் அணி சார்பில் துபாய் பெல்ஜியம் ஸ்பெயின் அபுதாபி உள்ளிட்ட அந்த நாடுகளின் நடைபெற்ற பல்வேறு சர்வதேச கார் ரேஸிங் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெற்றுள்ளது. தொடர்ந்து பல முக்கிய ரேஸிங் போட்டிகளிலும் அஜீத்குமார் ரேஸிங் அணி கலந்துக்கொண்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக குறிப்பாக போட்டியாளர்களாக இருந்தவர்கள் நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜீத்குமார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை தொடங்கிய நடிகர் விஜய் இப்போது தமிழகத்தின் முதல்வராக ஆகிவிட்டார். மேலும் அவர் இனி சினிமாவில் நடிப்பதில்லை என்றும் அறிவித்துள்ளார்.
நடிகர் அஜீத்குமார் தனது விருப்பமான கார் ரேஸிங்கில் அதிக கவனம் செலுத்தி வருவதால் அவரும் சினிமாவில் நடிக்காமல் இருந்து வருகிறார். இப்படி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான விஜய் அஜீத் குமார் இருவருமே சினிமாவில் விலகி இருப்பது சினிமாவை விட்டு விலகி இருப்பது மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மன்சூர் அலிகான் நடிகர் அஜித்குமாருக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.
அந்த கடிதத்தில் நடிகர் மன்சூர் அலிகான் கூறியிருப்பதாவது, இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் நலனுக்காக நடிக்க வாங்க அஜீத்குமார் அவர்களே. அல்டிமேட் ஸ்டார் அஜீத்குமார் அவர்களுக்கு மன்சூர் அலிகானின் பணிவான வேண்டுகோள். தங்களை அடையாளம் கண்டது சினிமா. கோடிக்கணக்கான ரசிகர்கள் உங்கள் நடிப்பில் உருவானதற்கு காரணம் சினிமா.
விஜய் முதலமைச்சராகி விட்டார். நீங்கள் ரேஸ் ரேஸ் என்று சென்று மிகவும் ரிஸ்க்காக உயிரை பணயம் வைக்கும் கார் ரேஸ்தான் பேஷன் என்று உள்ளீர்கள். தயவு செய்து இலட்சக்கணக்கான தொழிலாளருக்கு வாழ்க்கை தரும் திரைத்துறையை கவனத்தில் கொண்டு ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த 10 தயாரிப்பாளர்களை சேர்ந்து தயாரிக்க வைத்து, உன்னத லட்சியத்திற்காக நடிக்க வாருங்கள் என்று இருகரம் கூப்பி இருகரம் நீட்டி வரவேற்கிறேன் என்று நடிகர் மன்சூர் அலிகான் அந்த கடிதத்தில் கூறியிருக்கிறார்.





