- Advertisement -
Homeபொழுதுபோக்குஉங்களுக்கு அஜீத்குமார் பிடிக்குமா, விஜய் பிடிக்குமா? - சிக்கலான கேள்விக்கு நெத்தியடி பதில் தந்த நடிகர்...

உங்களுக்கு அஜீத்குமார் பிடிக்குமா, விஜய் பிடிக்குமா? – சிக்கலான கேள்விக்கு நெத்தியடி பதில் தந்த நடிகர் ஹரீஷ் கல்யாண்!

- Advertisement -

பொறியாளன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இளம் நடிகர் ஹரீஷ் கல்யாண். அதன்பிறகு அவர் நடித்த சில படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இதற்கிடையே விஜய் டிவியில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக பங்கேற்று ஹரீஷ் கல்யாண் திரும்பியிருந்தார்.

இந்த சூழலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் அவர் நடித்த படம் பார்க்கிங். இந்த படத்தில் ஒரு காம்பவுண்டுக்குள் 2 வீடுகளில் வசிப்பவர்களில் யார் காம்பவுண்டுக்குள் காரை பார்க்கிங் செய்வது என்ற ஈகோ பிரச்னைதான் படத்தின் மையக்கரு. இதில் ஹரீஷ் கல்யாண் ஹீரோவாகவும் எம்எஸ் பாஸ்கர் வில்லனாகவும் நடித்திருந்தனர்.

- Advertisement -

யாருமே எதிர்பார்க்க முடியாத அளவுக்கு இந்த படத்தில் வில்லத்தனமாக நடிப்பில் அடித்து நொறுக்கி அசத்தி இருந்தார் எம் எஸ் பாஸ்கர். முதலில் சகஜமாக ஆரம்பிக்கும் அந்த கார் பார்க்கிங் பிரச்னை ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் கொடூரமாக தாக்கிக் கொண்டு கொலை செய்யும் முயற்சிகளில் ஈடுபடுவது பெரிய அளவில் ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது.

பார்க்கிங் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய லப்பர் பந்து படத்தில் நாயகனாக ஹரீஷ் கல்யாண் நடித்திருந்தார். இந்த படத்தில் மற்றொரு முக்கிய கேரக்டரில் அட்டக்கத்தி தினேஷ் கெத்து கேரக்டரில் நடித்திருந்தார். கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படமும் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

- Advertisement -

கடந்தாண்டில் வெளியான தமிழ் படங்களில் மிகவும் கவனம் பெற்ற அதிகம் வரவேற்பை பெற்ற படமாக லப்பர் பந்து படம் இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது ஹரீஷ் கல்யாண் டீசல் என்ற படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் ஹரீஷ் கல்யாண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு நடிகர் ஹரீஷ் கல்யாண் வந்திருந்தார். அப்போது அவரிடம், பார்க்கறதுக்கு அஜீத் மாதிரியே அழகா இருக்கறீங்க? உங்களுக்கு விஜய் பிடிக்குமா, அஜீத்குமாரை பிடிக்குமா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சிரித்தபடி பதிலளித்த ஹரீஷ் கல்யாண், அண்ணே, நான் மிகத் தீவிரமான விஜய் சாரோட ரசிகன். ஆனா அஜீத் சாரையும் ரொம்ப பிடிக்கும். விஜய் சாரையும் பிடிக்கும். அதுல எந்த பாகுபாடும் எனக்கு கிடையாது என்று கூறினார்.

- Advertisement -

சற்று முன்