தமிழ் சினிமாவில் கடந்த 1980 90களில் முன்னணி நட்சத்திர நாயகியாக வலம் வந்தவர் நடிகை அம்பிகா. ரஜினி கமல் விஜயகாந்த் சத்யராஜ் கார்த்திக் பிரபு கே பாக்யராஜ் மோகன் என அன்றைய நட்சத்திர ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். அதே போல் நடிகை ராதாவும் முன்னணி நாயகியாக அந்த காலகட்டத்தில் வலம் வந்தார். அக்கா தங்கை இருவரும் தமிழ் சினிமாவில் நாயகியாக கோலோச்சினர்.
குறிப்பாக நடிகை அம்பிகாவுக்கு பல படங்கள் பெரிய நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத் தந்தன. குறிப்பாக அந்த 7 நாட்கள் காக்கி சட்டை படிக்காதவன் காதல் பரிசு கண் சிமிட்டும் நேரம் சகலகலா வல்லவன் போன்ற பல படங்கள் அம்பிகாவுக்கு பெரிய வெற்றிப் படங்களாக இருந்தன. இப்போதும் அம்பிகா சில படங்களில் அம்மா அக்கா அண்ணி கேரக்டர்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.
கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த 1980 நடிகைகளில் அம்பிகா ராதா சகோதரிகள் மிகவும் முக்கியமானவர்களாக இருந்தனர். மேலும் அந்த காலகட்டத்தில் எம்ஜிஆரின் அன்புக்குரியவர்களாகவும் அவர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அம்பிகா ராதாவின் அம்மா கேரளாவில் காங்கிரஸில் மகளிர் அணி பொறுப்பில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை அம்பிகா கூறியதாவது. ஜீவன ஜோதி என்ற படத்தின் படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்து கொண்டிருந்தது. அப்போது தான் என்னிடம் வேலை பார்த்த டிரைவரை கொன்று கிணற்றில் வீசியதாக ஒரு பரபரப்பான தகவல் பரவியது.
அப்போது அந்த டிரைவரை நான் கொன்றுவிட்டதாகவும் துண்டு துண்டாக வெட்டி வீசியதாகவும் வதந்தியை கிளப்பி விட்டுவிட்டனர். எனக்கு சினிமாவில் நடிக்கவே நேரமில்லை. இப்படி எல்லாம் நான் ஏன் செய்ய வேண்டும் என்று தான் எனக்கு தோன்றியது. ஆனால் அதையெல்லாம் நம்பி ஏவிஎம் ஸ்டுடியோ வாசலில் டிரைவர் சங்கத்தை சேர்ந்த சிலர் பிரச்சனை பண்ணுனாங்க.
நான் வெளியே வராவிட்டால் உள்ளே வந்து என்னை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினார்கள். என் முகத்தில் ஆசிட் அடிப்பதாக சொன்னார்கள். அப்போது நான் எம்ஜிஆருக்கு போன் செய்தேன். இப்படி ஒரு பிரச்னையில் சிக்கி இருப்பதை சொன்னேன். உடனே போலீஸ் பாதுகாப்புடன் அவர் என்னை வீட்டுக்கு அனுப்பி வைத்தார் என்று நடிகை அம்பிகா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





