- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் கணவரை விட உங்களை தான் ரொம்ப காதலிக்கிறேன், வெளிப்படையாக சொன்ன இளம் ரசிகை -...

என் கணவரை விட உங்களை தான் ரொம்ப காதலிக்கிறேன், வெளிப்படையாக சொன்ன இளம் ரசிகை – நச்னெ பதில் தந்து அசத்திய பாலிவுட் நடிகர் ஷாருக்கான்!

- Advertisement -

பொதுவாகவே இன்றைய சினிமா ரசிகர்கள் ரசிகைகள் பலரும் தங்களுக்கு பிடித்தமான நடிகர்களை நடிகைகளை திரையில் பார்த்து ரசிப்பதோடு நின்று விடாமல் அவர்களை மனதளவில் வைத்து பூஜிக்கவே செய்கிறார்கள். ஒரு தரப்பினர் மானசீகமாக அவர்களை காதலிக்கவும் செய்கிறார்கள். தங்கள் கணவனை காட்டிலும் தங்களது மனைவியை காட்டிலும் அந்த நடிகர் அல்லது நடிகையை ஒரு தலையாக காதலிக்கும் ஒரு பெரிய கூட்டம் இன்றும் இருக்கிறது.

இது மிகவும் அபத்தமானது என்றாலும் இதை சிலர் வெளிப்படையாகவும் கூறி அதிர்ச்சி வைத்தியம் அளிக்கின்றனர். நடிகர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது ஒரு பெண், என் புருஷனை விட எனக்கு விஜய் தான் ரொம்ப பிடிக்கும் என்று பேசியது அப்போது சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் இதுகுறித்து நடிகர் விஜய் எந்த கருத்தும் சொல்லவில்லை.

- Advertisement -

ஆனால் பலரும் இதை கலாய்த்து சோசியல் மீடியாவில் பல மீம்ஸ் வீடியோக்களை வெளியிட்டு அலப்பறை செய்தது குறிப்பிடத்தக்கது. இது போன்ற ஒரு சம்பவம் சமீபத்தில் இந்தி நடிகர் ஷாருக்கானுக்கும் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திர நடிகர் சாருக் கான் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.

அங்கே அவர் நடனமாடியும் ரசிகர்களுடன் உரையாடியும் மகிழ்ந்தார். அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்த இளம் ரசிகை ஒருவர், ஷாருக்கான் என் கணவரை விட நான் உங்களை அதிகம் விரும்புகிறேன். உங்களை நான் காதலிக்கிறேன் என்று வெளிப்படையாக கூறிவிட்டார்.

- Advertisement -

இதற்கு பதில் அளித்த நடிகர் ஷாருக்கான் கூறுகையில், இது வெறும் பேச்சுக்காக சொல்லப்பட்ட வார்த்தை என்பதை எனக்கு நன்றாக தெரியும். உங்கள் உணர்வுகளை நான் புரிந்து கொள்கிறேன். உங்கள் கணவரும் இதை புரிந்து கொள்வார் என்று உறுதியாக நம்புகிறேன். உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன்.

உங்கள் கணவரையும் உங்கள் குடும்பத்தினரையும் நான் நேசிக்கிறேன். உங்கள் கணவருக்கு நீங்கள் லவ் யூ சொல்லுங்கள். மிக்க நன்றி என்று கூறினார். கணவருக்கு ஐ லவ் யூ சொல்லுங்கள், இது வெறும் பேச்சுக்காக சொல்லப்படும் வார்த்தை என்று எனக்கு தெரியும் என்று நடிகர் ஷாருக்கான் சொன்ன இந்த அட்டகாசமான பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்