- Advertisement -
Homeபொழுதுபோக்குமக்கள் சந்திப்புக்காக நாளை கரூர் செல்லும் தமிழக முதல்வர் விஜய், பாதுகாப்புக்காக செய்யப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...

மக்கள் சந்திப்புக்காக நாளை கரூர் செல்லும் தமிழக முதல்வர் விஜய், பாதுகாப்புக்காக செய்யப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – உஷார் நிலையில் போலீசார்!

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக இருந்தபோது நடிகர் விஜய் கரூரில் மக்கள் சந்திப்பு கூட்டத்துக்கு சென்றார். அப்போது இரவு நேரத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. இதுகுறித்து சிபிஐ விசாரணையும் நடந்து வந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வர் விஜய் நாளை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு கரூர் செல்ல இருக்கிறார். கரூரில் 41 பேர் பலியான அந்த துயர சம்பவத்துக்கு பிறகு முதன்முறையாக முதல்வர் விஜய் கரூர் செல்வது குறிப்பிடத்தக்கது. அதனால் தமிழ்நாடு போலீஸ் தரப்பில் பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

- Advertisement -

நாளை கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் மேடைக்கு வலதுபுறத்தில் பொதுமக்கள் வரிசையாக உள்ளே நுழையக்கூடிய வகையில் ஒரு வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேடைக்கு அருகே இடது புறத்தில் முதலமைச்சர் விஜய் வருவதற்கான வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி நடைபெறக்கூடிய இடத்தைச் சுற்றிலும் இரண்டு அடுக்கில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச் சுவரில் இருந்து உள்ளே வர ஒரு வழி அமைக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளே வந்த பிறகு மேடைக்கு அருகே சுற்றி வைக்கப்பட்டுள்ள முதல் அடுக்கு தடுப்பில் தொண்டர்கள் பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் இரண்டு வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

சுமார் பத்து ஏக்கர் பரப்பளவில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 10 ஆயிரம் பேர் அமரும் அளவிற்கான இடத்தில் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். 40 அடி நீளம் 60 அடி அகலத்தில் ஒரு பெட்டியில் 315 நபர்கள் அமரும் அளவிற்கு 16 பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு பெட்டியிலும் மின்விசிறி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

20 ஆயிரம் பேருக்கு ஒரு லிட்டர் கொள்ளளவு உள்ள குடிநீர் பாட்டில்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். பகல் 11 மணிக்கு முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சி தொடங்க உள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகில் டிரான்ஸ்பர்கள் மற்றும் மின்கம்பங்கள் இருப்பதால் அதன் மீது யாரும் ஏறாமல் இருப்பதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்