- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகனுக்கு போட்டியாக ஜெயிலர் 2 பட விழாவை அங்கு நடத்த திட்டமா? இணையத்தில் வைரலாகும் முக்கிய...

ஜனநாயகனுக்கு போட்டியாக ஜெயிலர் 2 பட விழாவை அங்கு நடத்த திட்டமா? இணையத்தில் வைரலாகும் முக்கிய தகவல் – உண்மை நிலவரம் என்ன?

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த கடைசி படம் ஜனநாயகன். இந்த படம் 6 மாதங்களாக திரைக்கு வராமல் முடங்கியிருந்த நிலையில் இப்போதுதான் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்துள்ளது. வருகிற 26ம் தேதி ஜனநாயகன் ரிலீஸ் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் வெளியாவது தளபதி ரசிகர்களை தவெக கட்சி நிர்வாகிகள் தொண்டர்களை குஷிப்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படமும் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படத்தின் போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. இந்த படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் என்று ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. ஜெயிலர் 2 படத்துக்கு பிறகு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் தர்மன் படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த வாரிசு படம் வெளியான போது தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்று சில பிரபலங்கள் பேசியது பெரிய சர்ச்சையை கிளப்பியது. அன்று முதல் ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் பனிப்போர் இருந்து வருகிறது. இதற்கிடையே விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து தமிழகத்தின் முதல்வராகவும் ஆகி விட்டார்.

ஆனால் பல ஆண்டுகளாக அரசியல் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த் கடைசியில் பின்வாங்கியதால் அதை முக்கிய விமர்சனமாகவும் விஜய் ரசிகர்கள் வைத்து ரஜினி ரசிகர்களை கலாய்த்து வருகின்றனர். அதே போல் விஜய் குறித்து பேசிய ரஜினிகாந்தும், கமல்ஹாசனை போல விஜயை நேரில் சென்று சந்திக்கவும் இல்லை என்றும் விமர்சனம் எழுந்தது.

- Advertisement -

இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிக பிரமாண்டமாக நடந்தது. அதுவரை அவ்வளவு பெரிய கூட்டத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் எந்த ஒரு விழா தமிழ் பட விழாவும் நடக்கவில்லை. அது ஒரு சாதனையாக பேசப்பட்டு வருகிறது. அதை மாற்றிக் காட்ட மிக விரைவில் ஜெயிலர் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்த உள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஜெயிலர் 2 பட விழாவை மலேசியாவில் நடத்தி காட்டவும் விஜய்க்கு திரண்ட கூட்டத்தை விட அதிகளவில் மக்கள் அந்த விழாவில் பார்வையாளர்களை பங்கேற்கவும் ஒரு ஏற்பாடு நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இது தகவலாக மட்டுமே உள்ள நிலையில் சன் பிக்சர்ஸ் தரப்பிலோ அல்லது இயக்குனர் நெல்சன் தரப்பிலோ இது உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்