இந்திய சினிமாவில் நட்சத்திர இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தமிழில் நடிகர் தனுஷ் ஸ்ருதிஹாசன் நடித்த 3 என்ற படத்தை அப்போதைய தனுஷின் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டைரக்ட் செய்தார். இந்த படத்தில் தான் இசையமைப்பாளராக அனிருத் அறிமுகமானார். அந்த படத்தில் அனிருத்தை இசையமைப்பாளராக பரிந்துரை செய்ததே நடிகர் தனுஷ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளாக இசையமைப்பாளர் அனிருத் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கிடையே சில நடிகைகள் பாடகிகளுடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் அப்போதெல்லாம் அதற்கு தனது வலைதள பக்கங்களில் பதில் அளித்த அனிருத், அது வதந்தி என்பதை உறுதி செய்தார்.
சில மாதங்களுக்கு முன்பு அனிருத்தின் தந்தை நடிகர் ரவி ராகவேந்திராவிடம் நிருபர்கள் கேட்ட போது, என் மகன் திருமணம் எப்போது என்று எனக்கே தெரியாது. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் என்று காமெடியாக கூறியிருந்தார். இவர் நடிகர் ரஜினியின் மனைவி லதாவின் சொந்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போதைய லேட்டஸ்ட் தகவலின்படி சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனை இசையமைப்பாளர் அனிருத் திருமணம் செய்ய உள்ளார் என்கிற தகவல் உறுதியாகி உள்ளது. இதை ரவி ராகவேந்திராவின் சகோதரியின் கணவர் நடிகர் ஒய்ஜி மகேந்திரா சமீபத்தில் உறுதிப்படுத்தி இருந்தார்.
ஸ்பெயின் நாட்டில் உள்ள பலேரிக் தீவுகளில் ஒன்றான மல்லோர்க்கா தீவில் இந்த திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இருதரப்பு மணமக்கள் குடும்பத்தினரும் செய்து வருகின்றனர். மேலும் வருகிற நவம்பர் மாதம் 12ம் தேதி அனிருத் – காவ்யா திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
இசையமைப்பாளர் அனிருத் சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனின் மருமகன் ஆகிறார். ரஜினிகாந்த் ஏற்கனவே கலாநிதி குடும்பத்துடன் நெருக்கமான நட்பில் இருப்பவர். இப்போது குடும்ப உறவுகளிலும் நெருக்கமாக உள்ளனர். வரும் அக்டோபர் 16ம் தேதி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான ரஜினியின் ஜெயிலர் 2 படம் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.





