- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படத்தில் கிளைமாக்ஸ் காட்சி, அதை டோட்டலாக மாற்றியவரே ரஜினிதான் - இயக்குனர் கார்த்திக்...

அந்த படத்தில் கிளைமாக்ஸ் காட்சி, அதை டோட்டலாக மாற்றியவரே ரஜினிதான் – இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். கடந்த 2012ம் ஆண்டில் பீட்ஸா என்ற படம் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். தொடர்ந்து அவர் இயக்கிய ஜிகர்தண்டா இறைவி மெர்க்குரி பேட்ட ஜகமே தந்திரம் மகான் ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் ரெட்ரோ உள்ளிட்ட படங்களை அவர் டைரக்ட் செய்திருக்கிறார்.

மேலும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் என்னும் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல படங்களை கார்த்திக் சுப்பராஜ் தயாரித்தும் இருக்கிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் கடந்த 2019ம் ஆண்டில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி திரிஷா சிம்ரன் சசிக்குமார் மாளவிகா மோகனன் குரு சோமசுந்தரம் இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

கல்லூரி ஒன்றுக்கு விடுதி வார்டனாக வரும் காளி என்கிற ரஜினிகாந்த் அங்கு படிக்கும் தனது நண்பனின் மகனை வில்லன்களில் இருந்து காப்பாற்றுவதுதான் படத்தின் மையக் கதை. பேட்ட வேலனாக பிளாஷ்பேக் காட்சிகளில் ரஜினி அசத்தலான நடிப்பை தந்திருப்பார். அதில் சில காட்சிகளில் மட்டும் ரஜினிக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேட்ட படம் குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறியதாவது, பேட்ட படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கான ஸ்கிரிப்டை நான் எழுதி வைத்திருந்தேன். அதை ரஜினி சாரிடம் கொடுத்து விட்டேன். வில்லனை சுட்டுக்கொன்று விட்டு வில்லனின் மகன் விஜய் சேதுபதியையும் ரஜினி கொல்வதுதான் அந்த காட்சி.

ஆனால் நான் எழுதிய வசனங்களை தவிர்த்து விட்டு ரஜினியே அந்த காட்சிக்கான வசனங்களை மாற்றி சொன்னார். கேட்க கேட்க எனக்கே வியப்பாகி விட்டது. விஜய் சேதுபதியை தனது மகன் சின்னா என்று பொய் சொல்லி ஏமாற்றி வில்லனை பழிவாங்கிய விஷயத்தை ராஜ தந்திரம் என்று ரஜினி பேசும் அந்த காட்சிதான் அது.

அது பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. நான் எழுதிய ஸ்கிரிப்ட்டை காட்டிலும் ரஜினி சார் சொன்ன அந்த டயலாக்கும் விஷயங்களும்தான் படத்துக்கு சூப்பர் கேட்சிங் ஆக இருந்து ரசிகர்களை உற்சாகமடைய வைத்தது. அப்போதுதான் தலைவர் எத்தனை படங்களில் நடித்தவர், ரசிகர்களின் மனநிலை பற்றி அவருக்கு தெரியாததா? அதுதான் சரியான இடத்தில் அட்டகாசமான டயலாக் பேசி அசத்தி விட்டார் என்று நான் மிரண்டு போய்விட்டேன் என்று கார்த்திக் சுப்பராஜ் அதில் கூறியிருக்கிறார்.

சற்று முன்