தமிழ் திரைப்பட துறையில் இருந்து தமிழக முதல்வர் ஆனவர் விஜய். அவர் முதல்வராக பதவியேற்ற கடந்த இரண்டு மாதங்களாக சினிமாத்துறையை சார்ந்த ஏராளமான பிரபலங்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பல முன்னணி நடிகர் நடிகைகள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என பலரும் முதல்வர் விஜயை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜய்க்கு குருவி என்ற படத்தில் தாயாக நடித்தவர் மூத்த நடிகை டி கே கலா. அவர் கில்லி படத்தில் நடிகை திரிஷாவுக்கு அம்மாவாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று முதல்வர் விஜயை சந்திக்க அவர் தலைமை செயலகத்துக்கு நேரில் வந்தார். ஆனால் அவர் முன் அனுமதி பெறாததால் போலீசார் அவரை முதல்வர் விஜயை சந்திக்க அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
இதனால் பல மணி நேரம் அங்கு காத்திருந்த அவர் பிறகு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மூத்த நடிகை டி.கே கலா கூறியதாவது, தம்பி விஜய் நடித்த குருவி படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன். அது மட்டுமில்லாமல் கில்லி படத்திலும் நான் அவருடன் நடித்திருக்கிறேன். இன்னும் சொல்லப் போனால் அவருடைய ஃபேமிலி பிரண்ட் என்று கூட சொல்லலாம்.
தம்பி சிறுவயதிலிருந்து எங்க ஏரியாவில் தான் வளர்ந்தார். அவர் இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார். அவரைப் பார்த்து சந்தோஷப்பட்டு நேரில் வாழ்த்தி விட்டு போகலாம் என்ற எண்ணத்தில் தான் நான் இங்கு வந்தேன். ஏனென்றால் அவர் இன்னைக்கு நேற்று எனக்கு பழக்கமில்லை. அவரது குடும்பத்தில் இருக்கும் அனைவரையுமே எனக்கு நன்றாக தெரியும். என்னையும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
என்னுடைய அம்மாவையும் அவர்களுக்கு தெரியும். அதனால் எங்களுக்குள் ஒரு குடும்ப நட்பு இருக்கிறது. தம்பி விஜய் சீரும் சிறப்புமாக ஒரு நேர்மையான ஆட்சியை தமிழ்நாட்டில் நடத்திக் கொண்டிருக்கிறார். அதனால் தம்பியை நேரில் பார்த்து வாழ்த்தி விட்டு போகலாம் என்று தான் வந்தேன் என்றார். ஆனால் முதலமைச்சரை சந்திக்க முன்கூட்டியே எந்த ஒரு அனுமதியும் அவர் பெறாமல் வந்ததால் அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பாதுகாப்பு காரணம் காட்டி டிகே கலாவை அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி விட்டார்கள்.
நடிகைகள் சமந்தா குஷ்பூ சிம்ரன் சினேகா என பலரும் தங்கள் குடும்பத்துடன் வந்து முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் சினிமாத்துறையில் நீண்ட காலமாக நடித்த பழம்பெரும் நடிகை சண்முகசுந்தரி அவரது மகள் டி கே கலா மூத்த நடிகையாக உள்ள நிலையில் அவரைப் போன்ற மூத்த கலைஞர்களை விஜய் புறக்கணிப்பது சரி இல்ல என்று ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.





