- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த சகோதரத்துவம் அந்த பிணைப்பு… அது தொடர்கிறது - முதல்வர் விஜயை நேரில் சந்தித்த...

அந்த சகோதரத்துவம் அந்த பிணைப்பு… அது தொடர்கிறது – முதல்வர் விஜயை நேரில் சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கியவர் நடிகர் விஜய். கட்சி துவங்கிய இரண்டு ஆண்டுகளில் தமிழக முதல்வர் பதவிக்கு வந்தவர் விஜய். இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கும் கிடைக்காத பெருமை சாதனை விஜய்க்கு மட்டுமே உள்ளது.

ஏனென்றால் அரசியல் கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளில் தனித்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்று சட்டசபைக்கு நுழையும் போதே முதல்வராக நுழைந்த சாதனையை இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் விஜய் மட்டுமே செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் தமிழக முதல்வராக விஜய் பதவி ஏற்று இரண்டு மாதங்கள் ஆன நிலையில் தொடர்ந்து தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர்கள் நடிகைகள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் தியேட்டர் உரிமையாளர்கள் என பலரும் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சினிமா துறை சார்ந்த பல்வேறு கோரிக்கைகளையும் முதல்வர் விஜயிடம் மனுக்களாக அளித்து விடுகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் விஜயை நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பு குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த சந்திப்பின்போது முதல்வர் விஜயுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அந்த பதிவில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

- Advertisement -

தனது எக்ஸ் பதிவில் நடிகர் சிவகார்த்திகேயன் கூறியிருப்பதாவது, மக்களின் மனங்களை மகிழ்விப்பதில் தொடங்கி மாநிலத்தை வழிநடத்துவது வரை சில பயணங்கள் உண்மையில் அசாதாரணமானவை. தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தது பெருமைக்குரிய தருணம்.

ரசிகன் எக்ஸ்பிரஸ் முதல் விஜய் விருதுகள் மேடை வரை; தி கோட் திரைப்படத்தில் இணைந்து நடித்த முதல் இப்போது உங்களுடன் இந்த தருணம் வரை; இது எப்போதும் மிகவும் சிறப்பானதாகவே இருக்கும். அந்த சகோதரத்துவம் அந்த பிணைப்பு…. அது தொடர்கிறது என்று நடிகர் சிவகார்த்திகேயன் அந்த பதிவில் நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார். கடைசியாக வெளியான தி கோட் படத்தில் நடிகர் விஜயுடன் கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்