- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படம் வரும் 23ம் தேதி ரிலீஸ், விஜய் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் படத்துக்கு...

ஜனநாயகன் படம் வரும் 23ம் தேதி ரிலீஸ், விஜய் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் படத்துக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்!

- Advertisement -

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து கைதி விக்ரம் மாஸ்டர் லியோ கூலி ஆகிய படங்களை அவர் டைரக்ட் செய்தார். இதில் லியோ மற்றும் கூலி படங்கள் வணிகரீதியாக வெற்றி பெற்றாலும் மற்ற படங்களை போல் லோகேஷ் கனகராஜன் பெயர் சொல்லும் மாபெரும் ஹிட் படங்களாக அமையவில்லை.

விமர்சன ரீதியாக லியோ கூலி படங்கள் இரண்டுமே மிக மோசமான தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாக உள்ள படம் டிசி. சாணிக்காயிதம் கேப்டன் மில்லர் படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் டிசி படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நாயகியாக வாமிகா கபி நடித்துள்ளார் .

- Advertisement -

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ்க்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. ஆக்சன் காதல் கதைக்களத்தில் இந்த படம் உருவாகி உள்ளது. ஏற்கனவே டிசி படத்தின் இரத்தம் தெறிக்கும் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்றுள்ளது. முன்னதாக டிசி படத்தை வருகிற 30ம் தேதி ரிலீஸ் செய்வதாக படக்குழு தரப்பில் அறிவித்து இருந்தனர்.

சமீபத்தில் தணிக்கைக்கு அனுப்பப்பட்ட இந்த படம் ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியையும் வருகிற ஆகஸ்ட் 7ம் தேதிக்கு மாற்றியுள்ளனர். இது குறித்த அறிவிப்பை போஸ்டருடன் டி சி படக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் நடிகர் விஜய் நடித்த படம் வருகிற 23ம் தேதி ரிலீஸ் ஆவதுதான். முதல்வர் விஜய் நடித்த கடைசி படமான ஜனநாயகன் ஆறு மாத தாமதத்திற்கு பிறகு அடுத்த வாரம் 23ம் தேதி ரிலீஸாக உள்ளது.

- Advertisement -

பொதுவாக முன்னணி ஹீரோ நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது ஒரு வாரத்துக்கு முன்பும் ஒரு வாரத்துக்கு பிறகும் மற்ற படங்களை திரையிடுவதை தவிர்ப்பார்கள். ஜனநாயகன் படம் கண்டிப்பாக பல தியேட்டர்களில் 2 வாரங்களையும் கடந்து ஓடும் என்பதால் அந்த நேரத்தில் போதிய எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைக்காது. அதனால் டிசி படம் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர்.

நாளை ரிலீஸாக இருந்த அர்ஜூனன் பேர் பத்து டார்க் ஹெவன் அடுத்த வாரம் வெளியாக இருந்த ஜீவி பிரகாஷின் இம்மார்டல் மற்றும் வருகிற 31ம் தேதி வெளியாக இருந்த சிக்மா ஆகிய படங்களும் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் லியோ படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இப்போது அவர் ஹீரோவாக நடித்த படத்துக்கு ஜனநாயகன் படம் இடையூறாக வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்