- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் நடிக்க மறுத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா - அந்த படத்தை மட்டும்...

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் நடிக்க மறுத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா – அந்த படத்தை மட்டும் 15 முறை பார்த்தாரா?

- Advertisement -

எப்போதுமே சினிமாவில் ஒருவர் அறிமுகமாகும் ஒரு கலைஞர் அல்லது வளரும் நிலையில் உள்ள ஒரு கலைஞர் என்றால் ஏற்கனவே பிரபலமானவர்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்ற மறுப்பார்கள். இயக்குனர் நடிகர் நடிகை யாராக இருந்தாலும் புதுமுகங்களுடன் இணைந்தால் தங்களது இமேஜ் கெட்டுவிடும் என்ற கோணத்தில் யோசிப்பார்கள்.

ஆனால் அவர்களால் புறக்கணிக்கப்பட்டவர்களே ஒரு கட்டத்தில் சினிமாவில் முன்னணிக்கு வந்து விட்டால் அப்போது அவர்களை தேடிச் செல்வார்கள். உங்கள் இயக்கத்தில் நடிக்கிறேன். உங்களுக்கு ஜோடியாக நடிக்கிறேன் என்று வலிய போவார்கள். ஒரு சூப்பர் ஹிட் படம் கொடுத்த இயக்குனரை தேடும் முன்னணி நட்சத்திர நடிகர்கள், முதலில் அவர்கள் கதை சொல்ல சென்ற போது விரட்டியடித்து இருப்பார்கள்.

- Advertisement -

இது தமிழ் சினிமாவில் சகஜமான ஒன்றுதான். வெற்றி பெற்றவர்களை தங்களுடன் சேர்த்துக்கொள்வதும் தோற்றுப் போனவர்களை நிராகரிப்பதும் கலைஞர்களின் பழக்கமாக இருக்கிறது. அந்த வரிசையில் இயக்குனர் இமயம் என்று பின்னாளில் கொண்டாடப்பட்ட இயக்குனர் பாரதிராஜாவுக்கும் அப்படி ஒரு கசப்பான அனுபவம் கிடைத்திருக்கிறது.

இயக்குனர் பாரதிராஜா சினிமாவில் இயக்குனராக ஆசைப்பட்டு சென்னைக்கு வந்தார். பெரிய அளவில் அவர் மக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை. அந்த சூழலில் அன்றைய முன்னணி நடிகர் முத்துராமன் மற்றும் நடிகை ஜெயலலிதாவை வைத்து ஒரு படம் எடுக்க ஆசைப்பட்டார். அதற்காக ஸ்கிரிப்ட்டும் அவர் எழுதியிருக்கிறார்.

- Advertisement -

ஆனால் அப்போது அவர் புதுமுக இயக்குனர் என்பதால் ஜெயலலிதா பாரதிராஜாவின் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவிர்த்து விட்டார். பாரதிராஜா இயக்கத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்று நிராகரித்து விட்டார். அதன்பிறகு இயக்குனர் பாரதிராஜா பல வெற்றிப் படங்களை கொடுத்து நட்சத்திர இயக்குனராக மாறினார். தமிழ் சினிமாவே அவரை கொண்டாடியது.

அப்போது இயக்குனர் பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை திரைப்படத்தை பார்த்த ஜெயலலிதா அப்படியே வியந்து போயிருக்கிறார். அந்த படத்தை மட்டும் 15 முறை பார்த்ததாக கூறிய அவர் இயக்குனர் பாரதிராஜாவை நேரில் அழைத்து இது மிகவும் அற்புதமான ஒரு படைப்பு என்றும் மனதார பாராட்டி இருக்கிறார் என்ற ஒரு தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்