- Advertisement -
Homeபொழுதுபோக்கு100 கோடி ரூபாய் பட்ஜெட் படம் என்றாலும் 4 கோடி ரூபாய் பட்ஜெட் படம் என்றால்...

100 கோடி ரூபாய் பட்ஜெட் படம் என்றாலும் 4 கோடி ரூபாய் பட்ஜெட் படம் என்றால் அதை மட்டும் தயவு செஞ்சு செய்யாதீங்க – நடிகர் ஜீவா சொன்ன சக்சஸ் பார்மூலா சீக்ரெட்!

- Advertisement -

நடிகர் ஜீவா பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். பிரபல சினிமா தயாரிப்பாளர் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி செளத்திரியின் இளைய மகன்தான் நடிகர் ஜீவா. மூத்த மகன் ஜித்தன் ரமேஷ் என்பது தமிழ் சினிமா ரசிகர்கள் அறிந்த தகவல்தான். இதில் ஜீவா நடித்த கோ படத்துக்கு பிறகு தலைவர் தம்பி தலைமையில் – டிடிடி படம் மூலம் பெரிய வெற்றியை கம்பேக் பெற்றிருக்கிறார்.

மலையாள இயக்குனர் நிதிஷ் சஹதேவ் இயக்கிய இந்த படத்தின் திரைக்கதை திருமண சடங்கு நடக்கும் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் முதியவர் ஒருவர் இறந்து விட இறுதி சடங்கு நடக்கவும் ஏற்பாடுகள் நடக்கிறது. 2 வீட்டுக்காரர்களும் பகையாளிகளாக உள்ள நிலையில் பஞ்சாயத்து தலைவரான ஜீவா எப்படி அந்த பிரச்னைகளை சமாளிக்கிறார் என்பதுததான் இந்த படத்தின் கதை.

மலையாளத்தில் ஃபெமிலி படத்தை இயக்கிய நிதிஷ் சஹதேவ் தமிழில் இயக்கிய முதல் படம்தான் தலைவர் தம்பி தலைமையில். இதில் தம்பி ராமையா, இளவரசு இருவரும்தான் பக்கத்து வீடுகளில் வசிக்கும் எதிரிகளாக நடித்திருக்கின்றனர். இதில் நடிகர் ஜென்சன் திவாகர் நடிப்பு படத்தின் கதையோட்டத்துக்கு பெரிய பலமாக இருக்கிறது. அவருக்கும் ஜீவாவுக்கும் இடையே நடக்கும் மோதல்தான் கதைக்கு விறுவிறுப்பை சேர்க்கிறது.

பஞ்சாயத்து தலைவராகஜீவா நடிப்பில் வெளியான டிடிடி படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜீவா கூறியதாவது, என்ன படமாக இருந்தாலும் சரி அதை 45 நாட்களில் எடுத்து முடித்துவிட வேண்டும். அதற்கு மேல் தாமதித்தால் ஏதாவது ஒரு விதத்தில் நஷ்டம் ஏற்படும். 100 கோடி ரூபாய் படம் என்றாலும் 4 கோடி ரூபாய் படம் என்றாலும் அதை 45 நாட்களுக்குள் எடுத்து விட வேண்டும்.

ஏனென்றால் 45 நாட்களுக்கு மேல் போனால் வட்டி தாங்க முடியாது. நான் ஒரு சினிமா தயாரிப்பாளர் குடும்பத்தில் இருந்து வந்தவன். நிதி நிலவரங்களை அறிந்தவன். காரணமே இல்லாமல் நிறைய வட்டியை இழக்கும் வலியை பற்றி எனக்கு தெரியும். எந்த டெக்னீஷியன் கைக்கும் அந்த பணம் போவது இல்லை. எந்த நடிகரின் கைக்கும் அந்த பணம் போவதில்லை. புட்டேஜ் தான் நிறைய ஆகிறது.

எந்த அளவுக்கு படத்தை எடுப்பதில் தாமதம் செய்கிறோமோ அந்த அளவுக்கு பணத்துக்கு வட்டி உயர்கிறது. படமும் பழசாகி விடுகிறது. அதோடு படத்தின் நடித்த நடிகர்கள், டெக்னீஷியன் உழைப்பும் வீணாகிறது. அதனால் கல்லு சூடாக இருக்கும் போதே தோசை போட்டுடணும். தோசை சூடாக இருக்கும் போதே சாப்பிட்டு விடணும் என்று நடிகர் ஜீவா அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

சற்று முன்