- Advertisement -
Homeபொழுதுபோக்குநீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிகை நயன்தாரா - ஹாய் படம் ரிலீஸ் தேதி...

நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிகை நயன்தாரா – ஹாய் படம் ரிலீஸ் தேதி வந்தாச்சு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டவர் நடிகை நயன்தாரா. பிறகு அவரே தனக்கு அந்த பட்டம் வேண்டாம் என்று மறுத்து அறிக்கை விட்டார். இயக்குனர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்துக்கொண்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாடகைத் தாய் மூலம் 2 ஆண் குழந்தைகளுக்கு இந்த தம்பதி பெற்றோர் ஆகினர்.

தமிழில் நடிகை நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளியான படம் அன்னபூரணி. ஏறக்குறைய இந்த படம் வெளியாகி இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மேலான நிலையில் தமிழில் நயன்தாரா நடித்த எந்த படமும் வெளியாகவில்லை. இதற்கு இடையே தெலுங்கில் மன சங்கர வர பிரசாத் காரு என்ற படத்தில் நயன்தாரா மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியுடன் ஜோடியாக நடித்திருந்தார்.

- Advertisement -

அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து தமிழில் மண்ணாங்கட்டி மூக்குத்தி அம்மன் ரெண்டு ஹாய் உள்ளிட்ட படங்களில் நடிகை நயன்தாரா நடித்திருந்தார். இப்போது நடிகர் கவின் உடன் நயன்தாரா இணைந்து நடித்துள்ள ஹாய் படம் விரைவில் வெளிவர உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணி செய்த விஷ்ணு எடவன் டைரக்ட் செய்து இருக்கிறார்.

இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. வயதில் சிறிய ஒரு வாலிபர் தன்னைவிட மூத்த வயதுடைய ஒரு பெண்ணை காதல் செய்வது போன்ற ஒரு கதைகளத்தில் ஹாய் படம் உருவாகி இருப்பதாக தெரிய வருகிறது. ஹாய் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.

- Advertisement -

இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையில் விஷ்ணு எடவன் பாடல் வரிகளில் ஜீவி பிரகாஷ் பாடிய ஹாய் படத்தின் முதல் பாடலான கன்னக்குழியா என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ஹாய் படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த படத்துக்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிகை நயன்தாரா நடித்த ஹாய் படம் திரைக்கு வருவது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் நயன்தாரா தனது நம்பர் 1 இடத்தை தக்க வைப்பாரா என்பதும் கேள்வியாக மாறியுள்ளது.

- Advertisement -

சற்று முன்