- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படத்தில் நான் வில்லனாக நடிப்பேன் என்று எனக்கே தெரியாது, திடீரென நடிக்க வைத்து விட்டனர்...

அந்த படத்தில் நான் வில்லனாக நடிப்பேன் என்று எனக்கே தெரியாது, திடீரென நடிக்க வைத்து விட்டனர் – இயக்குனர் சந்தான பாரதி சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகராக இயக்குனராக வலம் வருபவர் சந்தான பாரதி. பல படங்களில் வில்லனாக அவர் நடித்திருக்கிறார். அப்பா கேரக்டரிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். சில படங்களில் காமெடி ரோல்களிலும் வந்திருக்கிறார். அவர் நடித்த படங்களில் ராமராஜன் கனகா நடித்த கரகாட்டக்காரன் படத்தில் அந்த கிராமத்து பண்ணையார் கேரக்டர் ரசிகர்களால் மறக்க முடியாதது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் சந்தானபாரதி கூறியதாவது, கரகாட்டக்காரன் படத்தில் வில்லன் கேரக்டரில் நடிப்பேன் என்று எனக்கே தெரியாது. என்கிட்ட சொல்லவே இல்லை. கங்கை என்னுடைய நல்ல நண்பர் ஏதோ ஒரு விஷயம் பற்றி பேசுவதற்காக கங்கை அமரனை சந்திக்க போனேன்.

- Advertisement -

அப்போது அவர் திடீரென சரிப்பா, இந்த படத்தில் நீ நடிக்கறே. மதியமே ஷூட்டிங் என்றும் சொல்லி விட்டார். என்னப்பா இது என்றேன். ஆமா இந்த படத்துல நீ தான் வில்லன் என்று சொன்னார். அப்புறம் அந்த படத்தில் நான் மறுக்க முடியாமல் நடிக்க வேண்டியதாகி விட்டது.

அதே போல் மைக்கேல் மதன காமராஜன் படத்திலும் அப்படி தான் நடந்தது. அவரை எதற்காகவோ நான் நேரில் சென்று பார்த்த போது, ஏம்பா அந்த கேரக்டருக்கு இவரை போட்டுவிடலாம் என்று கூறிவிட்டார். கமல் என்னுடைய நெருங்கிய நண்பர். நானும் அவரும் ரொம்ப காலமாக பிரண்ட்ஸ். சிறுவயதில் இருந்தே இருவரும் பழக்கம். 50 ஆண்டுகாலமாக எங்கள் நட்பு தொடர்கிறது.

- Advertisement -

நான் இயக்குனரான போது செய்த முதல் படம் பன்னீர் புஷ்பங்கள். பிரதாப் போத்தன் கேரக்டரில் நடிக்க கமலிடம் கேட்டோம். ஆனால் அப்போது கமல் தமி் மலையாளம் என நிறைய படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்தார். அதனால் டேட் பிக்ஸ் பண்ண முடியலே.

அப்புறம் நான் நிறைய படங்கள் பண்ணிய போது கமல் சார் வளர்ந்து பெரிய நடிகராகி விட்டார். அப்புறம் அவரை வைத்த சாதாரண கதைகளை எடுக்க முடியாது. பத்தோடு பதினொன்னா ஒரு படம் பண்ண முடியாது. கமர்ஷியல் பண்ண கூடாது. நல்ல வித்யாசமான கதைக்காக காத்திருந்த நேரத்தில் தான் அவரது நடிப்பில் குணா படம் இயக்கும் வாய்ப்பு அமைந்தது என்று இயக்குனர் சந்தான பாரதி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்