தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தவர் விமல். குருவி கில்லி உள்ளிட்ட பல படங்களில் சில காட்சிகளில் துணை நடிகராக வந்தவர் விமல். பிறகு பசங்க படம் மூலம் கதையின் நாயகனாக அவர் அறிமுகமானார். அந்த படம் அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது.
தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா வாகை சூடவா களவாணி கலகலப்பு போன்ற படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இதில் களவாணி படம் 2வது பாகமாகவும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து விமல் பல படங்களில் நடித்து அந்த படங்களும் சுமாரான வெற்றியை பெற்றது.
இந்நிலையில் நடிகர் விமல் சொந்தமாக தயாரித்து அவர் ஹீரோவாக நடித்த படம் மன்னர் வகையறா. இந்த படம் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. இந்த படத்தை தயாரிக்க கோபி என்பவரிடம் விமல் 4.5 கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.
ஒரு கட்டத்தில் இந்த கடனை திருப்பி செலுத்தும் வகையில் நடிகர் விமல் கோபிக்கு காசோலை வழங்கியுள்ளார். அந்த காசோலை வங்கியில் பணம் இன்றி திரும்பி வந்தது. அதன் பின்பும் நடிகர் விமல் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட கோபி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரணைக்காக நடிகர் விமல் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். அவரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்த்தி இன்று தீர்ப்பளித்தார். நீதிபதி அளித்த உத்தரவில் நடிகர் விமலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு ஓராண்டனை ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய வசதியாக நடிகர் விமலுக்கு கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. சில நடிகர்கள் பெரிய நடிகர்களாக வளர்வதற்கு முன்பே இதுபோல் சொந்தமாக படம் தயாரித்து நிதி நெருக்கடியில் சிக்கி கொள்கின்றனர். அந்த வரிசையில் நடிகர் விமலுக்கு ஏற்பட்ட சிக்கல் காரணமாக செக் மோசடி வழக்கில் அவருக்கு 1 ஆண்டு காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் விரைவில் மேல் முறையீடு செய்ய வாய்ப்புள்ளது.





