தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி ரோலில் நடித்து காமெடி நடிகராக வலம் வருபவர் கூல் சுரேஷ். சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டிவியில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் போட்டியாளராக கலந்துக்கொண்டார். ஆனால் அவர் டைட்டில் வின்னராக வரவில்லை. சிம்பு நடித்த நிறைய படங்களில் கூல் சுரேஷ் நடித்திருக்கிறார்.
மேலும் டி ராஜேந்தா் கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சிகளிலும் நடிகர் கூல் சுரேஷ் அடிக்கடி காணப்படுகிறார். ஏற்கனவே விழா ஒன்றில் தொகுப்பாளருக்கு கழுத்தில் மாலை போட்டு சர்ச்சையில் சிக்கியவர்தான் இவர். இந்தியன் 2 படம் வெளியான போது தியேட்டர் ஒன்றுக்கு இந்தியன் தாத்தா கமல் போன்ற உடையில் குதிரையில் வந்து அலப்பறை செய்தவரும் இவர்தான்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசிய காமெடி நடிகர் கூல் சுரேஷ் நடிகர் விஜய்க்கு புதுமையான ஒரு கோரிக்கை வைத்தார். அப்போது அவர் கூறியதாவது, தவெக கட்சியோட ஒரு மீட்டிங் சேலத்தில் நடக்குது. விஜய் சார் உங்ககிட்ட ஒரு வேண்டுகோள். நீங்க மீட்டிங் நடந்துங்க. வேண்டாம்ன்னு சொல்லலே.
ஆனா அதை வெள்ளிக்கிழமை அன்னிக்கு நடத்தாதீங்க. இன்னைக்கு வெள்ளிக்கிழமை 10 12 படம் ரிலீஸ் ஆயிருக்கு. நீங்க ஒரு நடிகர். உங்களுக்கு தெரியும். அந்த புரடியூசரோட வலி என்ன? இயக்குனரோட வலி என்ன என்பது. நீங்க வெள்ளிக்கிழமை மீட்டிங் நடத்துனா சோஷியல் மீடியா ஃபுல்லா விஜய் வீட்டை விட்டு வெளியே வந்துட்டார். விஜய் கார்ல ஏறிட்டார். விஜய் பிளைட்டுல ஏறீட்டாருன்னு இந்த நியூஸ்தான் சோஷியல் மீடியா முழுக்க வந்துட்டு இருக்குது.
அப்போ இன்னிக்கு தியேட்டர்ல வெளியான இந்த 10 12 படங்களோட நிலைமை என்ன ஆவறது? அதனால் விஜய் சார், உங்ககிட்ட ஒரு தாழ்மையான வேண்டுகோள். ஒரு தாயுள்ளதோடு இனிமேல் நீங்க எந்த ஒரு மீட்டிங் நடத்தினாலும் அதை வெள்ளிக்கிழமை அன்னிக்கு நடத்தாதீங்க என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் விஜய் சேலத்தில் வெள்ளிக்கிழை கூட்டம் நடத்தினால் தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் படங்களுக்கு எப்படி கூட்டம் இல்லாமல் போகும்? அதுவுமின்றி டிவியில் செல்போனில் விஜய் பேச்சை பார்க்கும் வசதி இருக்கும் போது அதற்காக மக்கள் தியேட்டருக்கு படம் பார்க்க வராமல் இருப்பார்களா? இவர் காமெடி நடிகர் என்பதால் இப்படியும் காமெடி செய்கிறாரா என்று தளபதி ரசிகர்கள் கூல் சுரேஷை கலாய்த்து வருகின்றனர்.





