இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வம்சம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அருள்நிதி. அவர் நடித்த பல படங்களில் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்த படம் அஜய் ஞானமுத்து இயக்கிய டிமாண்டி காலனி மற்றும் டிமாண்டி காலனி 2 ஆகிய படங்கள் தான்.
ஹாரர் கதைக்களத்தில் உருவான இந்த படங்கள் பெரிய அளவில் அருள்நிதிக்கு வெற்றியை தந்தது. கடந்த 2015ல் டிமாண்டி காலனி முதல் பாகமும், அதைத் தொடர்ந்து 9 ஆண்டுகள் கடந்து 2024ம் ஆண்டில் தீபாவளி பண்டிகைக்கு டிமாண்டி காலனி 2 படமும் வெளியானது. 2ம் பாகத்தில் பிரியா பவானி ஷங்கர் நாயகியாக நடித்திருந்தார். மேலும் அருண்பாண்டியன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் வருகிற செப்டம்பர் 10ம் தேதி டிமாண்டி காலனி 3ம் பாகம் படம் ரிலீஸ் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. இப்போது அந்த ரிலீஸ் இல்லை என் தெரிய வந்துள்ளது.அதே செப்டம்பர் 10ம் தேதி பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த சர்தார் 2 மற்றும் நடிகர் சூரி நடித்த மண்டாடி ஆகிய படங்கள் ரிலீஸ் செய்யப்பட இருக்கின்றன.
மண்டாடி படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற தெலுங்கு பட நிறுவனம் தயாரித்துள்ளது. அதனால் ஆந்திரா தெலுங்கானா பகுதிகளில் தெலுங்கு தயாரிப்பு நிறுவனமானது நிறைய தியேட்டர்களை வசப்படுத்திக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது. அதேபோல் சர்தார் 2 படமும் கர்நாடகா பகுதிகளில் அதிக தியேட்டர்களை எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது.
ஏனென்றால் சர்தார் 2 படத்தின் இணை தயாரிப்பாளர் கர்நாடகாவை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. அதனால் டிமாண்டி காலனி 3 படத்துக்கு ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா பகுதிகளில் போதிய தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. கார்த்தி சூரி அதிக கவனம் பெறுவார்கள் என்பதால் அருள்நிதி படம் 3ம் இடத்துக்கு தள்ளப்பட வாய்ப்புள்ளது.
அதனால் சர்தார் 2 மண்டாடி படங்களை அதிக தியேட்டர்களில் திரையிடப்பட இருப்பதால் டிமாண்டி காலனி 3 படத்துக்கு போதிய எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைக்காது. அதனால் வருகிற செப்டம்பர் 10ம் தேதி ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கும் முடிவுக்கு டிமாண்டி காலனி 3 படக்குழு வந்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.





