இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லி. பிறகு ஆர்யா நயன்தாரா ஜெய் நஸ்ரியா சத்யராஜ் சந்தானம் உள்ளிட்டோர் நடித்த ராஜா ராணி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து நடிகர் விஜய் நடித்த மெர்சல் தெறி பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை அட்லி கொடுத்து மிகப்பெரிய அளவில் நட்சத்திர இயக்குனராக அட்லி மாறினார். அதன்பிறகு பாலிவுட் பக்கம் சென்ற அவர் இந்தி நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் என்ற படத்தை இயக்கினார்.
அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. இந்தி திரையுலகமே அட்லியை திரும்பி பார்த்தது. ஜவான் படம் 1150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. இந்த படத்தில் தீபிகா படுகோனே உடன் நயன்தாரா பிரியாமணி விஜய் சேதுபதி யோகிபாபு என தமிழ் சினிமா நட்சத்திரங்களும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் பிரமாண்ட தயாரிப்பில் ஐகான் ஸ்டார் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் ராக்கா என்ற சயன்பிக்சன் படத்தை இயக்குனர் அட்லி மிகப்பெரிய பட்ஜெட்டில் இயக்கி வருகிறார். இந்த படத்தின் கதை திரைக்கதை மற்றும் படப்பிடிப்பில் ஹாலிவுட் கலைஞர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஹாலிவுட் ஸ்டைலில் மிகப் பிரமாண்டமான அதிக பட்ஜெட்டில் ராக்கா படத்தை அட்லீ உருவாக்கி வருகிறார். இந்த படத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து விடுகிறது. இந்த சூழலில் ராக்கா படம் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏனெனில் இயக்குனர் அட்லி எப்பொழுதுமே அதிக பொருட்செலவில் படம் எடுப்பவர். எனவே ராக்கா படம் 2 பாகங்களாக உருவாக்கி ரிலீஸ் செய்தால் மட்டுமே பெரிய அளவில் லாபம் கிடைக்கும் என்பதால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படி ஒரு முடிவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ராக்கா படம் 2 பாகங்களில் வெளிவரும் பட்சத்தில் இந்த படமும் 2000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளும் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.





