தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை காஜல் அகர்வால். நான் மகான் அல்ல அழகுராஜா ஜில்லா துப்பாக்கி விவேகம் என தமிழில் பல படங்களில் காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். திருமணத்துக்கு பிறகும் 2 பிள்ளைகளுக்கு தாயான பிறகும் தொடர்ந்து அவர் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் தி இந்தியா ஸ்டோரி என்ற படம் வெளியானது. இந்த படம் குறித்த பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு நடிகை காஜல் அகர்வால் அந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து பேசி வருகிறார்.
இந்நிலையில் தற்போது ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை காஜல் அகர்வால் படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நேர்ந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதுகுறித்து நடிகை காஜல் அகர்வால் கூறியதாவது, இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த போது ஷாட் இடைவேளை நேரத்தில் நான் கேரவனுக்குள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன்.
அப்போது நான் தனியாக இருந்தேன். கேரவனுக்குள் யாரும் இல்லை. அந்த நேரத்தில் உதவி இயக்குனர் ஒருவர் திடீரென கேரவனுக்குள் நுழைந்துவிட்டார். அவர் தனது மேலாடையை கழட்டி விட்டு அவரது நெஞ்சில் காஜல் என்று என்னுடைய பெயரை பச்சை குத்தி இருப்பதை என்னிடம் காட்டினார். அவரது இந்த எதிர்பாராத நடவடிக்கையால் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்து விட்டேன்.
என்னுடைய கை கால்கள் எல்லாம் நடுங்கத் தொடங்கி விட்டது. என் மீதான அபரிதமான அன்பின் காரணமாக தான் அந்த நபர் எனது பெயரை தனது நெஞ்சு பகுதியில் பச்சை குத்தியிருக்கிறார் என்பதை நான் புரிந்து கொண்டேன். ஆனால் அதே நேரத்தில் ஒரு பெண் தனித்திருக்கும் போது அவரது தனிப்பட்ட இடத்திற்குள் அனுமதி இல்லாமல் யாரும் நுழைவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இதுபோன்ற செயல்கள் கடுமையான கிரிமினல் நடவடிக்கைக்கு உட்பட்டது. அதனால் அந்த உதவி இயக்குனரை நான் எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தேன் என்று நடிகை காஜல் அகர்வால் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். உதவி இயக்குனராக இருந்தாலும் தனிமையில் கேரவனுக்குள் இருந்த காஜல் அகர்வால், தனது அனுமதி இன்றி அங்கே வந்தது மட்டுமின்றி மேலாடையை கழட்டியதும் கிரிமினல் நடவடிக்கையாக உள்ளது என்றும் அந்த நபரை அங்கிருந்து விரட்டியதாக கூறியிருக்கிறார்.





