- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படம் ஜெயிக்கலே… நான் ஹார்மோனியம் பெட்டிய தொடலே… நடிகர் ரஜினிகாந்திடம் சவால் விட்ட இசைஞானி...

அந்த படம் ஜெயிக்கலே… நான் ஹார்மோனியம் பெட்டிய தொடலே… நடிகர் ரஜினிகாந்திடம் சவால் விட்ட இசைஞானி இளையராஜா!

- Advertisement -

இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் நேற்று இரவு சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் மற்றும் இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இளையராஜாவின் சிம்பொனி அரங்கேற்றமும் இந்த விழாவில் நடந்தது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, இளையராஜா ஆரம்பத்தில் பேண்ட் சர்ட் அணிந்துக்கொண்டு கிராப் வைத்துக்கொண்டு ஸ்டைலாக தான் இருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் வேட்டி ஜிப்பா அணிந்து கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து மொட்டை அடித்துக்கொண்டா்.

- Advertisement -

அவரை பார்த்து ஆச்சரியப்பட்ட என்னிடம், இதுதான் என்னுடைய நிஜம் என்றார். அப்போது முதல் இளையராஜாவை சாமி என நான் அழைக்க ஆரம்பித்துவிட்டேன். இளையராஜா ஒருமுறை என்னிடம் பேசும் போது, என்னுடைய தம்பி கங்கை அமரன் இசையமைப்பாளர், டைரக்டர் என ஓரளவு நல்ல நிலையில் வசதியாக வாழ்ந்து வருகிறார்.

ஆனால் இன்னொரு சகோதரர் பாஸ்கர் பொருளாதாரத்தில் சிரமப்படுகிறார். அவருக்காக ஒரு படம் நீங்கள் பண்ண வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உடனே நான் ஓகே சொல்லிவிட்டேன். அந்த படம்தான் ராஜாதி ராஜா. இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் பெரிய வெற்றிப்பட இயக்குனர்தான். ஷூட்டிங் தொடர்ந்து நடந்தது.

- Advertisement -

அப்போது எனக்கு அந்த படத்தின் மீதும் கதையின் மீதும் பெரிய பிடிப்பே ஏற்படவில்லை. என்ன படம் இது, கதை அவ்வளவு ஸ்ட்ராங்க் ஆக இல்லையே, இந்த படம் ஓடுமா என்றெல்லாம் சந்தேகம் வந்துவிட்டது. அந்த சூழலில் இளையராஜாவை சந்தித்து, என்னங்க இது இந்த படம் சரியாக போகுமா, ரொம்ப ஸ்ட்ராங்கா கதை இல்லையே என்றேன்.

அதற்கு சிரித்தபடியே இளையராஜா, இந்த படம் கண்டிப்பாக ஜெயிக்கும். வெள்ளிவிழா காணும் படமாக இருக்கும். அப்படி இந்த படம் ஜெயிக்காவிட்டால் ஹார்மோனிய பெட்டியை நான் தொடலே என சவால்விட்டு பேசினார். நான் அசந்து போய்விட்டேன். இவ்வளவு உறுதியாக சொல்கிறாரே என்றுதான் பிறகு அந்த படத்தை நடித்து முடித்தேன். அதே போல் அந்த படம் சில்வர் ஜூப்ளி தந்தது. அதுதான் இளையராஜா என்று ரஜினிகாந்த் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்