- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் தனுஷ் என்னிடம் அடி வாங்கியவர், அவருக்கும் எனக்கும் அப்போது ஆகவே ஆகாது, ஆனால்...

நடிகர் தனுஷ் என்னிடம் அடி வாங்கியவர், அவருக்கும் எனக்கும் அப்போது ஆகவே ஆகாது, ஆனால் இப்போ மாறிட்டார் – விஜய் பட நடிகை சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத நடிகைகளில் ஒருவர் மந்த்ரா. கடந்த 1996ம் ஆண்டில் வெளியான பிரியம் என்ற படத்தில் நடிகர் அருண்விஜய்க்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து லவ் டுடே படத்தில் விஜயுடன் நடித்திருந்தார். ஆனால் இந்த படத்தில் கதாநாயகி சுவலட்சுமிதான்.

அதன்பிறகு நடிகர் அஜீத்குமாருக்கு ஜோடியாக ரெட்டை ஜடை வயசு என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் 1997ம் ஆண்டில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து கண்ணன் வருவான் பெரிய இடத்து மாப்பிள்ளை கங்கா கௌரி என பல படங்களில் மந்த்ரா நடித்திருந்தார்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் தெலுங்கில் நிறைய படங்களில் நடித்த நடிகை மந்த்ரா பிறகு தெலுங்கு நடிகர் ஒருவரை காதல் திருமணம் செய்துக்கொண்டார். அதன்பிறகு தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு உசுரே என்ற படத்தில் 9 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை மந்த்ரா மீண்டும் நடித்திருந்தார்.

நடிகை மந்த்ரா கொழுக் மொழுக் நடிகையாக இருந்ததால் இவரை 1990களில் சின்ன குஷ்பு என்று ரசிகர்கள் அழைத்தது குறிப்பிடத்தக்கது. கவர்ச்சியான அழகால் ரசிகர்களை கவர்ந்த அவர் இப்போதும் அம்மா கேரக்டர்களில் நடிக்க அதிகமான வாய்ப்புகள் வருவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை மந்த்ரா கூறியதாவது, தனுஷ் என்னுடைய கிளாஸ்மேட். ஒரே ஸ்கூல்ல ஐந்தாம் வகுப்பு வரைக்கும் நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா தான் படித்தோம். கிளாஸ்ல நான்தான் குரூப் லீடர். என் குரூப்ல ஒரு ஆள்தான் தனுஷ். அவரை நான் பலமுறை திட்டியிருக்கிறேன்.

என்கிட்ட தனுஷ் அடி கூட வாங்கி இருக்கார். ரெண்டு பேருக்கும் ஸ்கூல்ல ஆகவே ஆகாது. ஆனால் நான் பார்த்த தனுஷ் வேற. நீங்க இப்போ பாக்குற தனுஷ் வேற. அப்போ அவர் பேரு வெங்கட் பிரபு. இப்பொழுது தனுஷா மாறி ஹீரோவாகி டைரக்டர் ஆவார்ன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை என்று நடிகை மந்த்ரா கூறியிருக்கிறார்

- Advertisement -

சற்று முன்