- Advertisement -
Homeபொழுதுபோக்குபாட்டு எழுத முடியாமல் தவித்த கண்ணதாசன்... நக்கலாய் பேசிய தயாரிப்பாளர்... கோபித்துக் கொண்டு கிளம்பிய போது...

பாட்டு எழுத முடியாமல் தவித்த கண்ணதாசன்… நக்கலாய் பேசிய தயாரிப்பாளர்… கோபித்துக் கொண்டு கிளம்பிய போது தோன்றிய வரிகள்.. அதுதான் அந்த மெகா ஹிட் பாடல்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் காலத்தால் அழிக்க முடியாத எழுத்துக்களை மக்களுக்கு எளிதில் கடத்தியவர் கவிஞர் கண்ணதாசன். நான்கே நான்கு நிமிட பாடல்களில், நமது வாழ்க்கையை சம்பந்தப்படுத்தி அடி மனதுக்குள் யோசிக்க வைத்தவர் இந்த அற்புத கலைஞர். குடும்ப பாசம், காதல், திருமணம், உறவு, நேசம், பகை என அத்தனைக்கும் எளிதாக பொருட்படும்படி சாமானியர்களுக்கு விளக்கிய இந்த சாணக்கியனை, தமிழ் சினிமாவின் ஒரு மகுடம் என்று கூறலாம்.

கன்னியின் காதலி என்ற திரைப்படத்தில் “கலங்காதிரு மனமே” என்பதுதான் கண்ணதாசன் எழுதிய முதல் பாட்டு. முதல் பாடலிலேயே, யார் இந்த எழுத்தாளர் என பல நாளும் கேள்வி எழுப்பப்பட்டு, பின்னாடி மக்களின் கவிஞராக அவர் அறியப்பட்டார். கவிஞர் கண்ணதாசன் – இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதன் கூட்டணியில் காலத்தால் அழியாத பாடல்கள் இங்கு ஏராளம் உண்டு. நாடே போற்றும் உன்னத கவிஞர் கண்ணதாசன், இன்றைய இளைய தலை முறையினரும் கொண்டாடும் ஒரு பாடலை, எழுத மூன்று நாட்களாக சிரமப்பட்டார் என்றால் அதை நம்ப முடிகிறதா. ஆம் அப்படி ஒரு சுவாரசியமான நிகழ்வு கண்ணதாசன் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளது.

இயக்குனர் கே பாலச்சந்தர் – தயாரிப்பாளர் அரங்கண்ணல் கூட்டணியில் உருவான திரைப்படத்திற்கு, அண்ணன் தனது தங்கையை திட்டி பாடுவது போல் காட்சி அமைக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான பாடலை எழுத படக்குழுவினர் கண்ணதாசனை அணுகியிருக்கிறார்கள். எழுத்துக்கள் பிறப்பதற்கு முன்பே அதற்கு சரியாக டியூன் போட்ட எம் எஸ் விஸ்வநாதன், கண்ணதாசனின் வரிகளுக்காக காத்திருந்திருக்கிறார்.

முதல் நாளில் கண்ணதாசனுக்கு வரிகள் எதுவும் சிக்காமல் போக, அதன்பணிகள் இரண்டாம் நாள் தள்ளிப் போயிருக்கிறது. அன்றைக்கும் கண்ணதாசனுக்கு பாடல் வரிகள் எதுவும் வரவில்லையாம். சரி என்று மூன்றாவது நாளாக இருவரும் சந்திக்க, கையில் பேனாவுடன் காகிதத்தை பார்த்து இருந்த கண்ணதாசன், எம் எஸ் விஸ்வநாதனிடம், அண்ணன் தங்கை பாடலுக்காக எதற்கு மெல்லிய ட்யூனை தேர்வு செய்தாய் என்று கேள்வி கேட்டிருக்கிறாராம். அதற்கு இந்த டியூன்தான் சரியாக இருக்கும் என்று எம் எஸ் வி சொல்ல, வரிகள் வராததால் சோர்ந்து போயிருக்கிறார் கண்ணதாசன்.

அப்போது எம்.எஸ்.வி காரில் தனது வீட்டிற்கு செல்ல, தயாரிப்பாளர் அரங்கண்ணலுக்கும் கண்ணதாசனுக்கும் இடையே சின்ன வாய் தகராறு ஏற்பட்டுள்ளதாம். அப்போது தயாரிப்பாளர் கண்ணதாசன் அங்கிருந்து வெளியேறச் சொல்ல, “யோவ் தெய்வம் தந்த வீடு வீதி இருக்கியா” என்று கூறி இருக்கிறாராம் கண்ணதாசன். நொடிப் பொழுதில் இதனையே பாடல் வரிகள் ஆக்கினால் என்ன என்று யோசித்த அவர், எம் எஸ் வி-ஐ அழைத்து வர சொல்லி, உடனடியாக அத்தனை வார்த்தைகளையும் எழுதி முடித்தாராம்.

பாடலின் ஒவ்வொரு வரிகளும் அற்புதமாய் அமைய, எந்தச் சரணத்தை தேர்ந்தெடுப்பது என்று குழம்பி போய் இருக்கிறார் கே பாலச்சந்தர். அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தில் இடம்பெற்ற தெய்வம் தந்த வீடு என்ற பாடலுக்கு பின்னால்தான் இத்தனை ரகசியம் ஒளிந்திருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. ஆன்மீக சொற்பொழிவாளர் சுகி சிவத்தின் சகோதரர் எம் எஸ் பெருமாள், அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தில் கதாசிரியராக பணிபுரிய, சிகரங்களுடன் நான் என்னும் தொகுப்பில் இதை அவர் பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

சற்று முன்