- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழில் நான் படம் இயக்கினால் அந்த ஹீரோக்களை வைத்துதான் படம் பண்ணுவேன் - புஷ்பா...

தமிழில் நான் படம் இயக்கினால் அந்த ஹீரோக்களை வைத்துதான் படம் பண்ணுவேன் – புஷ்பா பட இயக்குனர் சுகுமாரன் ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

ஒரு படத்தில் ஸ்டார் ஹீரோ நடித்திருந்தாலும் இசையமைப்பாளர் மிக சிறப்பாக இசை அமைத்திருந்தாலும் தயாரிப்பாளர் பிரமாண்டமாக செலவு செய்து பெரிய பட்ஜெட்டில் படத்தை தயாரித்திருந்தாலும் ஒரு படம் மாபெரும் வெற்றி பெறுவது அந்த படத்தின் இயக்குனரின் கைகளில்தான் இருக்கிறது. கதை திரைக்கதை படத்தில் சிறப்பாக வரவில்லை என்றால் எந்த படமும் ஜெயிக்காது.

அதற்கு சமீபத்திய உதாரணமாக இந்தியன் 2 கேம் சேஞ்சர் கங்குவா விடாமுயற்சி போன்ற பல படங்களை உதாரணமாக சொல்லலாம். கமல்ஹாசன் அஜீத்குமார் ராம்சரண் சூர்யா என பெரிய நடிகர்கள் நடித்திருந்தாலும் ஏஆர் ரகுமான் போன்ற பெரிய இசையமைப்பாளர் இசை அமைத்திருந்தாலும் இயக்குனர் ஷங்கர் போன்றவர்களே இருந்தாலும் கதை திரைக்கதை சொதப்பினால் படம் சுத்தமாக பிளாப் ஆகி விடும்.

- Advertisement -

ஆனால் புஷ்பா 2 என்ற பான் இந்தியா படத்தை ரூ. 1800 கோடி வரை வசூலிக்க செய்ய முடிகிறது என்றால் அது அந்த படத்தின் இயக்குனர் சுகுமாரன் போன்றவர்களின் அபரிமிதமான இயக்கமும் திறமையும்தான் அதில் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கடந்த 2004ம் ஆண்டில் தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடித்த ஆர்யா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுகுமாரன்.

இப்போது 20 ஆண்டுகளில் ரூ. 100 கோடி சம்பளம் வாங்கும் பெரிய ஸ்டார் இயக்குனராக மாறி இருக்கிறார். அவர் அறிமுகமான முதல் பட ஹீரோ அல்லு அர்ஜூனை வைத்து அவர் இயக்கிய புஷ்பா படம் ரூ. 450 கோடி வசூலித்த நிலையில் அதே படத்தின் 2ம் பாகம் ரூ. 1800 கோடி வசூலை எட்டி இந்திய சினிமாவில் சாதனை படைத்திருக்கிறது.

- Advertisement -

புஷ்பா புஷ்பா 2 படங்களின் தொடர்ச்சியாக புஷ்பா 3ம் பாகமும் எடுக்க இயக்குனர் சுகுமாரன் நடிகர் அல்லு அர்ஜூன் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அதுகுறித்த எந்த அறிவிப்பையும் இப்போதைக்கு வெளியிடாமல் இன்னும் சில ஆண்டுகள் கழித்து முறையாக அறிவிக்கவும், படப்பிடிப்பை துவங்கவும் திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே அல்லு அர்ஜூன் சில படங்களில் நடிக்கிறார். அதில் ஒன்றுதான் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் அவர் நடிக்கும் 22வது படமாகும்.

இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் புஷ்பா பட இயக்குனர் சுகுமாரன் கலந்துக்கொண்டார். அப்போது நீங்கள் தமிழில் படம் இயக்கினால், யார் உங்கள் படத்தின் நாயகன் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சுகுமாரன், எனக்கு விஜய் படத்தை இயக்க ஆசை. அஜீத்குமாரை வைத்து படம் இயக்கவும் ஆசை உள்ளது. அடுத்து நடிகர் கார்த்தியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை வைத்து படம் டைரக்ட் செய்யவும் ஆசைப்படுகிறேன், என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்