- Advertisement -
Homeபொழுதுபோக்குதினமும் 10 ஆயிரம் ரூபா நோட்டுக்கட்டு, 1 கோடி ரூபாய்க்கு மேல் அதை செய்திருப்பார் -...

தினமும் 10 ஆயிரம் ரூபா நோட்டுக்கட்டு, 1 கோடி ரூபாய்க்கு மேல் அதை செய்திருப்பார் – பிரபல நடிகர் குறித்து பேசிய விஜய் பட இயக்குனர் கேபி ஜெகன்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கே பி ஜெகன். நடிகர் விஜய் மீரா ஜாஸ்மின் நடித்த புதிய கீதை மற்றும் கோடம்பாக்கம் ராமன் தேடிய சீதை ஆகிய படங்களை இயக்கியவர். இயக்குனர் ராசுமதுரவன் இயக்கிய மாயாண்டி குடும்பத்தார் படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானவர்.

ஆரம்பத்தில் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் டி ராஜேந்தரின் அலுவலக ஊழியராக கேபி ஜெகன் இருந்தவர். அதன்பிறகு இயக்குனர் சேரனுடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக அவரது உதவியாளராகவும் அவர் பல படங்களில் அவருடன் பணியாற்றினார். நடிகர் விஜய் நடித்த புதிய கீதை என்ற படத்தை அவர் இயக்கியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் இயக்குனர் சேரன் நாயகனாக நடித்த ராமன் தேடிய சீதை மற்றும் கோடம்பாக்கம் ஆகிய படங்களையும் அவர் இயக்கியிருக்கிறார் அத்துடன் மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நடிகராக அறிமுகமான அவர் மிளகா கோரிப்பாளையம் அம்புலி முத்துக்கு முத்தாக நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ அழகன் அழகி சித்திரையில் நிலா சோறு கங்காரு பசங்க 2 நம்ம வீட்டுப் பிள்ளை எதற்கும் துணிந்தவன் தலைவன் தலைவி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் கேபி ஜெகன் கூறியதாவது, டி ராஜேந்தரை பார்த்து நான் எதையும் கற்றுக் கொள்ளவில்லை. ஆனால் நிறைய வியந்து இருக்கிறேன். தினமும் ஆபீஸ்ல இருந்து அவர் கிளம்பும்போது மேனேஜர் லூர்து சாமிகிட்ட இருந்து 10 ஆயிரம் ரூபாய் இரண்டு கட்டுகளை அவர் வாங்கிப்பார். எல்லாமே 100 ரூபாய் நோட்டுகளாக இருக்கும்.

- Advertisement -

வெளியே கிளம்பும்போது மெயின் கேட்டுக்கு வெளியே அவரைப் பார்க்க ரொம்ப பேர் வருவாங்க. பார்க்க வருகிற எல்லார்கிட்டயும் முதல்ல சாப்பிட்டியான்னு தான் அவர் கேட்பார். கிட்டத்தட்ட 200 பேருக்கு மேல அங்க இருப்பாங்க. எல்லாருக்கும் 100 ரூபாய் அவர் கையால கொடுப்பார். நான் அவர் கூட ஒன்றரை வருஷம் இருந்திருக்கிறேன்.

அந்த ஒன்றரை வருஷமும் தினமும் இப்படி 20 ஆயிரம் ரூபாய் மக்களுக்கு கொடுத்திருப்பார். எனக்கு தெரிஞ்சு கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் இப்படியே அவர் தர்மம் பண்ணி இருப்பார். இதுவரைக்கும் இது யாருக்கும் தெரியாது. இதை நான் கண்கூட பார்த்தேன் என்று இயக்குனர் கேபி ஜெகன் அந்த நேர்காணலில் டிஆர் குறித்து கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்