இந்தியாவின் எடிசன் என்று அழைக்கப்பட்டவர் ஜிடி நாயுடு. கோவையை சேர்ந்த ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாறு ஜிடிஎன் என்ற பெயரில் படமாக உருவாகி உள்ளது. இந்த படத்தில் ஜிடி நாயுடு வேடத்தில் மாதவன் நடித்துள்ளார். மேலும் துஷாரா விஜயன் பிரியாமணி சத்யராஜ் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். நாளை 7ம் தேதி இந்த படம் ரிலீசாகிறது.
சென்னையில் நடந்த ஜிடிஎன் பட விழாவில் படத்தின் நாயகன் நடிகர் மாதவன் பேசியதாவது, தமிழகத்தில் நிறைய டிராமா நடக்கிற இந்த நேரத்துல நீங்க இங்க வந்து என்கூட இருக்கறீங்க. நன்றி. எங்க வாழ்க்கையில் இது ஒரு பெரிய டிராமாவா இருக்கு. ஜிடி நாயுடுன்னு ஒரு கேரக்டரை பற்றி உலகத்திற்கு சொல்ல ஒரு வாய்ப்பு கொடுத்திருக்காங்க. அதை அதை சரியாக பொறுப்போடு சொன்னால் தான் மக்களுக்கு தெரியும்.
அதை சொதப்பி விட்டால் அதன் பாதிப்பு வேறு மாதிரி இருக்கும். இவரோட வாழ்க்கை கதை ஏன் என்று கேட்கலாம். இன்னைக்கு நடக்கிற பல விஷயங்களை அவர் அன்னைக்கே பண்ணிட்டார். ஊபர் என்கிற விஷயம் இப்போதுதான் நமக்கு தெரியும். அதை அவர் அப்பவே 80 வருஷங்களுக்கு முன்னாடியே பண்ணிட்டார்.
அந்த மாதிரி பல விஷயங்கள் இந்த படத்துல நீங்க பார்க்க போறீங்க. பில்கேட்ஸே இவரை பார்த்துதான் கத்துக்கிட்டாரா என்கிற ஒரு ஃபீலிங்கே நமக்கு வரும். ஏன்னா பில்கேட்ஸ் செய்த பல விஷயங்களை அவர் அன்றைக்கே செய்திருக்கிறார். அவர் பண்ணிய விஷயங்கள் அவரது கண்டுபிடிப்புகள் 10 சதவீதம் தான் படத்தில் இருக்கும். ஆனால் அவர் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வந்தார் என்பதை சொல்லி இருக்கோம்.
பாலிடெக்னிக் ஒரு வார்த்தை இவரால்தான் நமக்கு தெரியுது. பாலிடெக்னிக்கை இன்வென்ட் பண்ணினதே இவர்தான். இப்படிப்பட்ட ஒருவரின் கதையை ஏன் இவ்வளவு காலம் பொத்தி வைத்திருந்தார்கள் என்பது தான் எனக்கு புரியலே. அவரது முழு கதையை கேட்கும் போது நான் மிரண்டு போய் விட்டேன். இன்னைக்குஇருக்கிற ஸ்டார்ப் அப் விஷயங்கள் எல்லாம் அவர் அப்பவே செஞ்சு வச்சுருக்கார். என்னைக்கும் அவர் ஒரு பிரிட்டிஸ்க்காரன் முன்னாடி தலைகுனியவே இல்லை.
பிரிட்டிஷ்காரங்க ஜிடி நாயுடுவை ஜெயிக்கவே முடியவில்லை. ஆனால் அதுக்கப்புறம் வந்த பிரச்சனைகள்தான் இன்னமும் வருத்தமாக இருந்தது. நம்ம ஆளுங்களே போட்டு அவரை ஸ்டாப் பண்ணிட்டாங்க. இல்லாவிட்டால் அந்த காலத்திலேயே ஒரு மிகப்பெரிய கம்பெனி கோயம்புத்தூருக்கு வந்து இன்னைக்கு கோயம்புத்தூரோட கதையே வேற மாதிரி இருந்திருக்கும். இந்தியாவோட கதையே வேறயா இருந்திருக்கும் என்று நடிகர் மாதவன் அந்த விழாவில் பேசியிருக்கிறார்.





