- Advertisement -
Homeபொழுதுபோக்குபுதிய தொழில்நுட்பத்துடன் களமிறங்கும் வெங்கட் பிரபு, அமெரிக்காவிற்கு பயணித்த தளபதி 68 படக்குழு, வேற லெவல்...

புதிய தொழில்நுட்பத்துடன் களமிறங்கும் வெங்கட் பிரபு, அமெரிக்காவிற்கு பயணித்த தளபதி 68 படக்குழு, வேற லெவல் சம்பவம் ஒன்னு இருக்கு போலயே

- Advertisement -

“லியோ” திரைப்படத்தை தொடர்ந்து விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68 ஆவது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். லோகேஷ் கனகராஜின் “லியோ” திரைப்படத்திற்கு எந்தளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவு எதிர்பார்ப்பு “தளபதி 68” திரைப்படத்திற்கும் இருக்கிறது.

இந்த எதிர்பார்ப்பிற்கு வெங்கட் பிரபுவும் ஒரு காரணம் என்றாலும் முக்கிய காரணம் இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளதுதான். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு யுவன் ஷங்கர் ராஜா, விஜய் படத்திற்கு இசையமைக்கிறார்.

- Advertisement -

“தளபதி 68” திரைப்படத்தில் விஜய் தந்தை, மகன் என இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளாராம். இதில் தந்தை விஜய்க்கு ஜோதிகா ஜோடி எனவும், மகன் விஜய்க்கு பிரியங்கா மோகன் ஜோடி எனவும் கூறப்படுகிறது. அதே போல் இதில் ஜெய், மகன் விஜய்க்கு தம்பியாக நடிக்கிறார் எனவும் இவருக்கு அபர்ணா தாஸ் ஜோடியாக நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

இவ்வாறு “தளபதி 68” திரைப்படத்தை குறித்து அனுதினமும் பல தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் தற்போது ஒரு அசத்தலான தகவல் வெளிவந்துள்ளது.

- Advertisement -

அதாவது விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகிய மூவரும் தற்போது அமெரிக்காவிற்குச் சென்றுள்ளார்களாம். அங்குள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ள Institute of creative technology என்ற மையத்திற்குச் சென்று அங்கே விஜய்யை உடல் முழுவது Scan செய்யப்போகிறார்களாம்.

“தளபதி 68” திரைப்படத்தில் விஜய் தந்தை, மகன் என இரண்டு வேடங்களில் நடிக்க உள்ள நிலையில் இந்த இரண்டு வேடங்களும் தத்ரூபமாக அமைக்க படக்குழு இவ்வாறு ஒரு புதிய டெக்னாலஜியை பயன்படுத்த உள்ளார்களாம்.

விஜய்யின் முழு உடலையும் முழுவதுமாக ஸ்கேன் செய்துவிட்டு அவரது உருவத்தை எந்த கோணத்தில் வைத்து இரட்டை வேடத்தில் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என கிராபிக்ஸ் உதவியோடு உருவாக்க உள்ளார்களாம்.

- Advertisement -

சற்று முன்