- Advertisement -
Homeபொழுதுபோக்குமசாஜ் செய்ய போன இடத்தில் தாலியை தொலைத்த நடிகை, 2 நாள் கழிச்சுதான் அது மிஸ்...

மசாஜ் செய்ய போன இடத்தில் தாலியை தொலைத்த நடிகை, 2 நாள் கழிச்சுதான் அது மிஸ் ஆனதே தெரிஞ்சுதாம் – என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா…

- Advertisement -

தாலி தான் ஒவ்வொரு பெண்ணுக்கும் வேலி என்று சினிமாவில்தான் டயலாக் பேசுகின்றனர். தாலியை வைத்து பல படங்களில் உருக்கமான சென்டிமென்ட் காட்சிகளை பார்த்து ரசிகர்கள் அப்படியே உருகிப் போயிருக்கின்றனர். அந்த 7 நாட்கள் படத்தில் கூட கிளைமாக்ஸ் காட்சியில் தாலியை கணவர் ராஜேஷ் கழட்டப் போகும் போதுதான், அம்பிகா பதறிப் போய் மறுத்து விடுவார்.

அப்போதுதான் எண்ட காதலி உங்களுக்கு மனைவி ஆகலாம், ஆனா உங்க மனைவி என்ட காதலி ஆக முடியாது சாரே என்று பாலக்காட்டு மாதவன் கே பாக்யராஜ் டயலாக் பேசி கைதட்டல் பெற்றார். இப்படி தாலி சென்டிமென்ட் என்பது தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் நடிகை ஒருவர் தனது தாலியை தொலைத்த சம்பவத்தை 2 நாட்களுக்கு பிறகு தெரிந்துக்கொண்டு அதுகுறித்து வீடியோ ஒன்றும் பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்திருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான வினோதினி வண்ண வண்ண பூக்கள் ஆத்தா உன் கோயிலிலே என பல படங்களில் நடித்திருக்கிறார். டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

திருமணத்துக்கு பிறகு சினிமாவில் அதிக ஆர்வம் காட்டாமல் இருந்த நடிகை வினோதினி இப்போது மீண்டும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த சூழலில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு அவர் பேசியிருக்கிறார். அதில் ஸ்பா ஒன்றுக்கு மசாஜ் செய்வதற்காக அவர் சென்றிருக்கிறார். மசாஜ் செய்வதற்கு முன்பு தனது தாலி செயினை டப்பா ஒன்றில் கழட்டி வைத்த அவர் பிறகு அதை மறந்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டாராம்.

- Advertisement -

வீட்டுக்கு சென்று 2 நாட்கள் கழிந்த பிறகுதான் தாலிசெயின் குறித்த நினைவு வந்து அவர் தாலி செயின் காணாமல் போனதை உணர்ந்திருக்கிறார். அதன்பிறகு அந்த மசாஜ் சென்டரில் இதுகுறித்து விசாரித்த போது அவர்கள் தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை. அவர்கள் சரியான பதில் தராத நிலையில் போலீசில் புகார் கொடுக்க நடிகை வினோதினி முடிவு செய்திருப்பதாக அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.

மேலும் விலை உயர்ந்த நகைகளை ஆபரணங்களை இப்படிப்பட்ட இடங்களுக்கு செல்லும்போது அணியாமல் பெண்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். சினிமா நடிகைகள் மட்டுமின்றி இன்றைய பெண்கள் பலரும் தாலி செயினை அடிக்கடி கழட்டி வைத்துவிட்டு, ஏதோ அலங்கார பொருள் போல எடுத்து அவ்வப்போது அணிந்து கொள்கின்றனர். இந்த பழக்கம்தான் தாலி செயின் மிஸ் ஆனது கூட 2 நாட்களாக வினோதினிக்கு தெரியவில்லை என்று ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்