- Advertisement -
Homeபொழுதுபோக்கு6 மாதங்களில் முடிந்துபோன திருமண வாழ்க்கை, வாழ்நாள் முழுவதும் வேதனையை மட்டுமே தந்த மகன் -...

6 மாதங்களில் முடிந்துபோன திருமண வாழ்க்கை, வாழ்நாள் முழுவதும் வேதனையை மட்டுமே தந்த மகன் – ஆச்சி மனோரமாவின் நிஜக்கதையே கண்ணீர்தானா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் 1000 படங்களுக்கு மேல் நடித்த சாதனையாளர் ஆச்சி மனோரமா. முதலில் காமெடி கேரக்டர்களிலும் பின்னாளில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்த ஆச்சி மனோரமா, தமிழ் சினிமா வரலாற்றில் தனது சிறந்த நடிப்பால் முத்திரை பதித்தவர். எம்ஜிஆர் ஜெயலலிதா கருணாநிதி ஸ்டாலின் விஜய் என தமிழக முதல்வர்களுடன் பல படங்களில் நடித்த பெருமைக்கு உரியவர்.

ஆனால் ஆச்சி மனோரமாவின் சொந்த வாழ்க்கை சோகமயமானது. வாழ்நாள் முழுவதும் வேதனையிலேயே இருந்து மறைந்திருக்கிறார் ஆச்சி மனோரமா. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியதாவது, இளம் வயதில் நடிகை மனோரமா ராமநாதன் என்ற நாடக நடிகரை காதலித்தார். கண் திறந்தது என்ற படத்தில் அவர் ஹீரோவாக நடித்தவர்.

- Advertisement -

மனோரமாவின் காதலை அவரது அம்மா ஏற்காத நிலையில் திருச்செந்தூர் கோவிலில் அவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால் 6 மாதங்களில் ராமநாதன் மனோரமாவை விட்டு விட்டு போய்விட்டார். அப்போது மனோரமா கர்ப்பமாக இருந்தார். அவர்தான் மனோரமாவின் மகன் பூபதி. அவர் குடிப்பழக்கம் கொண்டவர். பல படங்களில் அவரை மனோரமா நடிக்க வைத்தார். ஆனால் சின்ன வயதில் இருந்தே குடிப்பழக்கத்தால் அவர் ஜெயிக்க முடியவில்லை.

கணவரும் 6 மாதத்தில் ஏமாற்றி போய்விட்டார். மகனும் குடிப்பழக்கத்தால் சீரழிந்து போகிறான் என்ற வேதனையில் காலம் முழுவதும் வாழ்ந்தவர் மனோரமா. திருமண வாழ்க்கை 6 மாதங்களுடன் முடிந்து போய்விட்டது. அதன்பிறகு அந்த கணவர் திரும்பி வரவே இல்லை. மகனும் குடிபழக்கத்துக்கு அடிமையாகி கடைசி வரை திருந்தவில்லை.

- Advertisement -

அதனால் படங்களில் நடித்து நடித்து சம்பாதித்த பணத்தை எல்லாம் தனது பேரன் பேத்தி பெயர்களில் எழுதி வைத்தார் மனோரமா. தன் மகனுக்காக வாழ்ந்தவர் மனோரமா. அப்போது சில இந்தி நடிகர்கள் மனோரமாவை மறுமணம் செய்ய முன்வந்து கேட்டார்கள். என் மகன்தான் எனக்கு முக்கியம். 6 மாத திருமண வாழ்க்கை தந்த கசப்பான அனுபவமே போதும் என்று மறுமணம் செய்ய மறுத்துவிட்டார் மனோரமா.

என் மகனுக்காக மட்டுமே இனி வாழ்கிறேன் என்று சொல்லி தன் மகனை செல்லமாக வளர்த்தார் மனோரமா. ஆனால் அந்த பையனும் அவருக்கு சந்தோஷத்தை கொடுக்காமல் வாழ்நாள் முழுவதும் துன்பத்தை தான் கொடுத்தார். இப்படி சினிமாவில் நம்மை எல்லாம் ரசிக்க வைத்த நடிகை மனோரமாவின் நிஜ வாழ்க்கை கண்ணீர் நிரம்பியதாக இருந்தது என்று பாலாஜி பிரபு அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்