- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெம் வீரமணி விவகாரம் குறித்து இணைந்து அறிக்கை வெளியிட்ட இயக்குனர்கள் அமீர் - வெற்றிமாறன், என்ன...

ஜெம் வீரமணி விவகாரம் குறித்து இணைந்து அறிக்கை வெளியிட்ட இயக்குனர்கள் அமீர் – வெற்றிமாறன், என்ன சொல்லியிருக்காங்க?

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக நல்ல படங்களை கொடுத்த இயக்குனர்கள் அமீர் மற்றும் வெற்றிமாறன். இவர்கள் அவ்வப்போது சமூகம் சார்ந்தும் அரசியல் சார்ந்தும் தங்களது கருத்துகளை பொதுவெளியில் துணிச்சலாக தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஜெம் வீரமணி விவகாரத்தில் இவர்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்ற புகார் எழுந்தது.

இதையடுத்து அவர்கள் இந்த விஷயத்தில் தங்களது நிலைப்பாட்டை அறிக்கை ஒன்றில் இன்று தெரிவித்துள்ளனர். சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் தொழிலதிபர் ஜெம் வீரமணி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஜெம் வீரமணி விவகாரம் குறித்து திரைப்பட இயக்குனர்கள் வெற்றிமாறன் மற்றும் இயக்குனர் இருவரும் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

- Advertisement -

அவர்கள் இணைந்து வெளியிட்ட அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஜெம் கிரானைட் வீரமணியின் கொடுஞ்செயல் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த உலகைப் பற்றியே முழுவதும் அறியாத பிஞ்சு கிருமிகளை குறி வைத்து அரங்கேற்றப்பட்டுள்ள இந்த தீய செயல்கள் மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும்.

வீரமணியை பாதுகாக்க முயன்ற அரசியல்வாதிகள் காவல்துறை அதிகாரிகள் அல்லது அதிகாரம் மிக்க நபர்கள் என அனைவரும் விசாரிக்கப்பட்டு பதவியிலிருந்து நீக்கப்பட்டு சட்டத்தின் முன் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். மேலும் பாலியல் துன்புறுத்தலால் அதிர்ச்சிக்கு உள்ளான அந்த சிறுமிகளுக்கு தேவையான சட்ட உளவியல் மற்றும் சமூக மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும்.

- Advertisement -

மேலும் பாதிக்கப்பட்ட அவர்களின் அடையாளமும் கண்ணியமும் கண்டிப்பாக பாதுகாக்கப்பட வேண்டும். இனி வருங்காலங்களில் பெண்கள் சிறுமிகள் சிறுவர்கள் மீது பாலியல் தொல்லை கொடுக்கும் குற்றவாளிகளுக்கு எந்த விதமான தளர்வுகளும் இன்றி மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படுவதே இது போன்ற குற்ற செயல்கள் இனி நடக்காமல் இருக்க வழிவகை செய்யும்.

வீரமணியின் இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு எந்தவித அழுத்தத்திற்கும் ஆளாகாமல் நேர்மையான விசாரணையை நடத்த வேண்டும். மேலும் மனித நேயத்தை கேள்விக்குறியாக்கும் பாலியல் குற்றங்களை செய்பவர்கள் எவராயினும் அவர்களுக்கு எதிராகவே எங்களுடைய குரல் எப்போதும் ஒலிக்கும் என்று அவர்கள் அந்த அறிக்கையில் கூறியிருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்