- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ இசை வெளியீட்டு விழா குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, கூலாக பதில் கூறிய மன்சூர் அலிகான்......

லியோ இசை வெளியீட்டு விழா குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, கூலாக பதில் கூறிய மன்சூர் அலிகான்… தலையில் கை வைத்த விஜய் ரசிகர்கள்…

- Advertisement -

கோலிவுட்டில் thug ஆக வலம் வரும் நடிகர் யார் என்றால், அது நிச்சயம் மன்சூர் அலிகானாகத்தான் இருக்கும். திரையிலும் சரி, திரைக்கு வெளியிலும் சரி எப்போதும் அசால்டாக இருந்து அசர வைக்கும் மன்சூர் அலிகானுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இது மட்டுமல்லாமல் இணையத்தில் மன்சூர் அலிகான் தொடர்புடைய டெம்லெட்டுகளை மீம்ஸ் கிரியேட்டர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமான மன்சூர் அலிகான், முதல் படத்திலேயே தன் எகத்தாள சிரிப்பின் மூலமும், ஆக்ரோஷமான நடிப்பின் மூலமும் ரசிகர்களை மிரட்டினார். இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பல வேடங்கள் தரித்து அவதாரம் எடுத்த மன்சூர் அலிகான், பலரையும் கவனிக்க வைத்தார்.

- Advertisement -

தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களுடன் நடித்த மன்சூர் அலிகானுக்கு, வெள்ளித் திரையில் ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன. இது ஒரு பக்கம் இருக்க அரசியலிலும் கவனம் செலுத்தினார் மன்சூர் அலிகான். நாம் தமிழர் கட்சி சீமான் உடன் இணைந்து தீவிரமாக பணியாற்றி வந்த அவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ் தேசிய புலிகள் எனும் கட்சியை ஆரம்பித்தார்.

அரசியல், நடிப்பு அதனால் ஏற்படும் சர்ச்சை என பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்ட மன்சூர் அலிகானுக்கு, கைதி படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் அந்த நேரத்தில் சிறை சென்றதால், அவர் கைதி படத்தில் நடிக்க முடியாமல் போனது. இந்த நிலையில் மன்சூர் அலிகானின்தீவிர ரசிகனாகிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அவரை எப்படியாவது தனது படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

- Advertisement -

எந்த மேடைக்கு சென்றாலும், அங்கு மன்சூர் அலிகானை பற்றி ஏதாவது ஒரு வகையில் பேசி விடுவார் லோகேஷ் கனகராஜ். இந்த நிலையில் தற்போது இயக்குனரின் லியோ படத்தில் மன்சூர் அலிகான் நடித்து வருகிறார். படத்தில் அவர் விஜய்யின் குழுவில் ஒருத்தராக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை உறுதி செய்யும் வகையில், சமீபத்தில் வெளியான நா ரெடி தான் பாடலில் அவர் வந்து போனார்.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளரிடம் பேசிய மன்சூர் அலிகான், மாநகராட்சி பள்ளிகளில் படித்த தமிழர்கள்தான் இன்று மிகப்பெரிய அளவில் சாதனை படைத்து வருகின்றனர். நீட் தேர்வை தூக்கிப் போட்டுவிட்டு, எந்த ஒரு நுழைவு தேர்வையும் வைக்கக்கூடாது. தமிழ்நாட்டு பாட நூலைதான் இந்தியா முழுவதும் வைக்க வேண்டும். விஜய் தனது மக்கள் இயக்கத்தை விரிவு படுத்தினால் உங்களுக்கு என்ன? அவர் வேலையை அவர் செய்கிறார். விஜய் என்ன வீட்டிலேயேவா உட்கார சொல்கிறீர்கள். இங்கு எல்லோருக்கும் எல்லா உரிமையும் இருக்கிறது. விஜய் அரசியலுக்கு வந்தால் அவருடன் இணைந்து பயணிப்பேன் என்று பேசினார். அவரிடம் லியோ படத்தில் இசை வெளியீட்டு விழா எங்கு நடைபெறுகிறது என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்க, நிலாவில் நடைபெறுகிறது என்று கூலாக பதில் சொல்லி அங்கிருந்து கிளம்பினார்.

- Advertisement -

சற்று முன்