- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழில் வாய்ப்பின்றி தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கிய வாரிசு நடிகை, குவியுது படவாய்ப்பு - அடுத்த...

தமிழில் வாய்ப்பின்றி தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கிய வாரிசு நடிகை, குவியுது படவாய்ப்பு – அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் இவங்கதானா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சரத்குமார். சேரன் பாண்டியன், நாட்டாமை, சூரியவம்சம் போன்ற படங்கள், சரத்குமாருக்கு மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன. இப்போதும் பொன்னியின் செல்வன், போர்த்தொழில் போன்ற படங்களில் நல்ல கேரக்டர்களில் நடித்து வருகிறார் சரத்குமார். சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார்.

சரத்குமாரின் மனைவி ராதிகா, தமிழ் சினிமாவில் பிரபல நடிகை. சூரியவம்சம் படத்தில் நடித்த பிறகு, சரத்குமாரை திருமணம் செய்துகொண்டார். ராதிகா ஏற்கனவே, இரண்டுமுறை திருமணமானவர். மகள் ஒருவர் இருந்த நிலையில், சரத்குமாரை மணந்தார். சரத்குமாரின் முதல் மனைவி சாயா, பெங்களளூருவை சேர்ந்தவர். இவரை விட்டு பிரிந்து, சரத்குமார் ராதிகாவை 2வது திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.

- Advertisement -

சரத்குமார் – சாயா தம்பதியின் மகள்தான் வரலட்சுமி. நீண்ட காலமாக, சென்னையில் சரத்குமார் – ராதிகா ஆகியோருடன் இருந்து படங்களில் நடித்து வந்தார். போடா போடி படம் மூலம் சிம்பு ஜோடியாக வரலட்சுமி அறிமுகமானார். அதன்பின் பல படங்களில் நடித்து, முக்கிய நடிகைகளில் ஒருவராக ரசிகர்களால் கவனிக்கப்பட்டார்.

சண்டைக்கோழி 2, தாரை தப்பட்டை, நிபுணன், விக்ரம் வேதா, மாரி 2, சர்கார், நீயா 2, சேஸிங், காட்டேரி, யசோதா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இதில் சர்கார், சண்டக்கோழி 2 போன்ற படங்களில் வில்லி கேரக்டரிலும் நடித்திருந்தார். தாரை தப்பட்டை படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டது. நடிகர் விஷாலை காதல் திருமணம் செய்துக்கொள்வார் என கிசுகிசு இருந்த நிலையில், அது நடக்கவில்லை.

- Advertisement -

நீண்டநாட்களாக தமிழ் படங்களில் வாய்ப்பின்றி ஏமாற்றமடைந்த வரலட்சுமி சரத்குமார், தெலுங்கில் ஓரிரு படங்களில் நடித்தார். தெலுங்கு ரசிகர்களுக்கு வரலட்சுமியை மிகவும் பிடித்துப்போய்விட இப்போது தெலுங்கில் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார் வரலட்சுமி. தமிழ் சினிமாவில் அப்பா சரத்குமார், அம்மா ராதிகா இருவருமே பெரிய ஸ்டார்களாக இருந்தும், தெலுங்கு சினிமா உலகம்தான் வரலட்சுமியை கொண்டாடி படவாய்ப்புகளை தந்து வருகிறது.

தெலுங்கில் தொடர்ந்து படவாய்ப்புகள் வருவதால், சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு ஷிப்ட் ஆகி விட்டார் வரலட்சுமி. பெங்களூருவில் உள்ள தனது அம்மா சாயா வீட்டில் இருந்து, ஹைதராபாத்துக்கு சென்று தெலுங்கு படப்பிடிப்புகளில் தொடர்ந்து கலந்துக்கொள்கிறார். இப்படியே போனால், ஒரு கட்டத்தில் தெலுங்கு லேடி சூப்பர் ஸ்டராக வரலட்சுமி சரத்குமார் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறது தெலுங்கு சினிமா வட்டாரம்.

- Advertisement -

சற்று முன்