- Advertisement -
Homeபொழுதுபோக்குதயாரிப்பாளர் சங்கத்தில் பிரபல இயக்குனர் மீது புகார் கொடுத்த நடிகர் விஷ்ணு விஷால் - இப்படி...

தயாரிப்பாளர் சங்கத்தில் பிரபல இயக்குனர் மீது புகார் கொடுத்த நடிகர் விஷ்ணு விஷால் – இப்படி மாறி மாறி புகார் கொடுக்கற அளவுக்கு என்ன தான் நடந்தது?

- Advertisement -

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான கட்டா குஸ்தி 2 படம் பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. அதைத் தொடர்ந்து இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பதாக ஏற்கனவே ஒப்பந்தம் ஆகியிருந்தது. இதற்காக ரூ. 3 கோடி வரை சம்பளம் பேசப்பட்டு அதில் 2.5 கோடிக்கு மேல் தயாரிப்பாளரான விஷ்ணு விஷால் கொடுத்திருக்கிறார்.

அத்துடன் உதவி இயக்குனர் இணை இயக்குனர் என மற்றவர்களுக்கும் மாதம் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை அவர் சம்பளம் தந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் அருண்ராஜா காமராஜ் படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க மறுத்துவிட்டதாகவும் கதை தனக்கு பிடிக்கவில்லை என்று கூறியதாகவும் தெரிகிறது.

- Advertisement -

ஒரு பாக்ஸர் இறுதியில் பவுன்சராக மாறுவதுதான் கதை. இந்த கதையை சில ஆண்டுகளுக்கு முன்பே கேட்டு பாராட்டிய விஷ்ணு விஷால், அந்த படத்தில் ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி படத்தை தயாரிக்கவும் முன்வந்திருக்கிறார். 2 ஆண்டுகளாக மாதந்தோறும் லட்சக்கணக்கில் கொடுத்து 2.5 கோடி ரூபாய் வரை இயக்குனருக்கு விஷ்ணு விஷால் தந்திருக்கிறார்.

ஆனால் இப்போது அந்த படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிக்க மறுப்பதாக கூறி இயக்குனர்கள் சங்கத்தில் அருண்ராஜா காமராஜ் புகார் அளித்திருக்கிறார். அதே நேரத்தில் படத்தின் தயாரிப்பாளரான நடிகர் விஷ்ணு விஷாலும் தயாரிப்பாளர் சங்கத்தில் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் மீது புகார் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அந்த புகாரில் தயாரிப்பாளர் நடிகர் விஷ்ணு விஷால் கூறுகையில், ஆரம்பத்தில் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் சொன்ன கதை மிகவும் பிடித்தது. பிறகு ஒவ்வொரு முறையும் அவர் கதையை டெவலப் செய்து என்னிடம் சொன்னார். ஆனால் முந்தைய கதை சொன்ன போது இருந்த பல கேரக்டர்கள் பிறகு கதையில் இல்லை. இப்படி ஒவ்வொரு முறையும் புதிய புதிய வெர்ஷனில் அவர் கதை சொல்கிறார்.

இப்படி கதையில் தொடர்ந்து மாற்றங்களும் திருத்தங்களும் செய்து கதை திரைக்கதையை உருவாக்கினால் நிச்சயமாக படம் சரியாக வராது. அவர் முதலில் சொன்ன கதை வேறு, இப்போது சொல்கிற கதை வேறாக இருப்பதால் அந்த படத்தை தயாரிக்கவோ அதில் நான் நடிக்கவோ முடியாது என்று தயாரிப்பாளர் சங்கத்தில் விஷ்ணு விஷால் புகார் அளித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்