- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாவில் பிஸியாக இருக்கும் போதே டிவி சீரியலில் நடித்த தில்லான 5 நடிகைகள் யாரெல்லாம் தெரியுமா?...

சினிமாவில் பிஸியாக இருக்கும் போதே டிவி சீரியலில் நடித்த தில்லான 5 நடிகைகள் யாரெல்லாம் தெரியுமா? – இது வேற லெவல் சம்பவமா இருக்குதே?

- Advertisement -

வழக்கமாக சினிமாவில் மார்க்கெட் இழந்த நடிகைகள்தான் டிவி சீரியல்களில் நடிக்க வருவார்கள். அங்கும் அவர்களுக்கு அக்கா அண்ணி அம்மா சித்தி கேரக்டர்கள்தான் பெரும்பாலும் நடிக்கும். சில நேரங்களில் டிவி சீரியல் நடிகைகள் அங்கு பிரபலமாகி சினிமாவில் நடித்து முன்னணி நாயகியாக மாறிய சம்பவங்களும் நடந்திருக்கிறது.

நடிகை வாணி போஜன் ஆரம்பத்தில் டிவி சீரியலில் நடித்து பிறகு சினிமா நடிகையாக மாறியவர். அதே போல் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிறகு நடிகையாக மாறியவர்கள்தான் பாத்திமா பாபு பிரியா பவானி ஷங்கர் சுஜாதா பாபு போன்றவர்கள்.

- Advertisement -

ஸ்வர்ணமால்யா கூட சன் டிவியில் இளமை புதுமை தொகுப்பாளராக இருந்தவர்தான். நடிகை காயத்ரி ஜெயராம் கூட ஆரம்பத்தில் டிவி தொகுப்பாளர்தான். ஆனால் அதே நேரத்தில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர ஹீரோக்களுடன் நடித்துக்கொண்டிருந்த பிஸியான காலகட்டத்தில் 5 நடிகைகள் டிவி சீரியல்களிலும் நடித்து ஜெயித்திருக்கின்றனர்.

கடந்த 2000ம் ஆண்டுகளில் பிஸியாக இருந்த நடிகை தேவயானி 2003ம் ஆண்டில் கோலங்கள் என்ற சீரியலில் நடித்து பெரிய அளவில் வரவேற்பை பெற்றார். கோலங்கள் சீரியல் பெண்கள் கொண்டாடிய ஒரு சீரியலாக இருந்தது. இதில் சினிமாவை விட அதிக புகழ் தேவயானிக்கு கிடைத்தது.

- Advertisement -

நடிகை ராதிகா சரத்குமார், 1999ம் ஆண்டில் சித்தி சீரியலில் நடித்து பெரிய வரவேற்பை பெற்றார். தொடர்ந்து அண்ணாமலை செல்வி வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பெயர் பெற்றார். அதே போல் படையப்பா நீலாம்பரியாக ஜெயித்த ரம்யா கிருஷ்ணன் 2004ம் ஆண்டில் தங்கம் என்ற சீரியலிலும் தொடர்ந்து வம்சம் கலசம் போன்ற டிவி சீரியல்களில் நடித்து வெற்றி பெற்றார்.

அதே போல் அந்த காலகட்டத்தில் மிகவும் உச்சத்தில் இருந்த நடிகை குஷ்பும் டிவி சீரியல்களில் நடித்தார். மருமகள் ஜனனி கல்கி போன்ற டிவி சீரியல்களில் நடித்து பெண்களிடம் பெரிய அளவில் கவனம் பெற்றார். அடுத்ததாக ரஜினி கமல் போன்ற ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்த நடிகை மீனாவும் 2005ம் ஆண்டில் சன்டிவியில் லட்சுமி என்ற சீரியலில் நடித்தது குறிப்பிடத்தக்கது. இப்படி தில்லான நாயகிகளாக சீரியல்களிலும் இவர்கள் அசத்தியிருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்