- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த வயசுல நாடகத்தனமாக ஏன் இருக்கறீங்க? நடிகை திரிஷா கடிந்து கொண்டது யாரை? - இணையத்தில்...

இந்த வயசுல நாடகத்தனமாக ஏன் இருக்கறீங்க? நடிகை திரிஷா கடிந்து கொண்டது யாரை? – இணையத்தில் வைரலான அந்த பதிவால் நீடிக்கும் குழப்பம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் திரிஷா. 40 வயதுகளை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக உள்ள நடிகை திரிஷாவிற்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் இருந்து வருகின்றன. கடைசியாக நடிகர் சூர்யாவுடன் அவரது நடிப்பில் வெளியான கருப்பு படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது.

கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்துவரும் நடிகை திரிஷாவுக்கு இன்னும் சினிமாவில் இமேஜ் குறையவில்லை. அவரது மார்க்கெட்டும் சரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதும் கூட தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கதாநாயகியாக நடிக்க திரிஷாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

- Advertisement -

தமிழில் நடிகை நயன்தாராவுக்கு அடுத்த நிலையில் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தேடிச் செல்வது நடிகை திரிஷாவை தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக முதல்வர் விஜய்க்கும் நடிகை திரிஷாவுக்கு நீண்ட கால நட்பு இருப்பது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான்.

இருவரும் கில்லி திருப்பாச்சி ஆதி குருவி லியோ என 5 படங்களுக்கு மேல் இணைந்து நடித்துள்ளனர். தி கோட் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் திரிஷா விஜயுடன் குத்தாட்டம் போட்டிருந்தார். ஆனால் அதே நேரத்தில் அவர்களது நட்பை காதல் என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். அவ்வப்போது நடிகை திரிஷா பதிவிடும் வலைதள பதிவுகளிலும் விஜய் பெயரை சேர்த்து விடுவது கோர்த்து விடுவது பலருக்கும் வழக்கமாக இருந்து வருகிறது.

- Advertisement -

இதற்கிடையே தனது கணவர் விஜயிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று கேட்ட அவரது மனைவி சங்கீதாவும் இப்போது விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றுள்ள நிலையில் நடிகை திரிஷாவின் நட்பில் இருந்து தமிழக முதல்வர் விஜய் முற்றிலும் விலகி விட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் நடிகை திரிஷா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஒரு பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

அதில் நடிகை திரிஷா கூறியிருப்பதாவது, இந்த வயதிலும் நாடகத்தனமாக இருப்பது சங்கடத்தை தருகிறது. அமைதியை தேடுங்கள். நீங்கள் செய்யும் அனைத்தும் உங்களிடமே திரும்பி வரும். ஆகவே நல்லதை செய்யுங்கள். நல்லவராக இருங்கள் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். நடிகை திரிஷா எதற்காக இப்படி ஒரு பதிவை செய்திருக்கிறார்? இது யாரை சுட்டிக்காட்டும் பதிவு? யாருக்காக இப்படி ஒரு பதிவை அவர் செய்திருக்கிறார் என்று ரசிகர்கள் பலத்த குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்