- Advertisement -
Homeபொழுதுபோக்குஉங்கள் அன்புக்கு நன்றி, 67 ஆண்டுகள் சினிமா பயணத்தில் 20 ஆண்டுகள் மட்டுமே எனக்கானது...

உங்கள் அன்புக்கு நன்றி, 67 ஆண்டுகள் சினிமா பயணத்தில் 20 ஆண்டுகள் மட்டுமே எனக்கானது – சகல கலைகளின் வல்லவன் நாயகன் கமல்ஹாசன்!

- Advertisement -

தமிழ் திரைப்படங்களில் மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திர நாயகனாக விளங்கியவர் நடிகர் கமல்ஹாசன். தமிழ் இந்தி மலையாளம் தெலுங்கு கன்னடம் என எல்லா மொழிகளிலும் கமல்ஹாசனுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். எல்லா மொழி படங்களிலும் நடித்து அசத்தியவர் நடிகர் கமல்ஹாசன்.

கடந்த 1960ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி அவர் முதலில் குழந்தை நட்சத்திரமாக முகம் காட்டி நடித்த களத்தூர் கண்ணம்மா என்ற படம் வெளியானது. தொடர்ந்து ஆனந்தஜோதி உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கமல்ஹாசன் பிறகு இளம் வயதில் உதவி நடன இயக்குனராக சினிமாவில் நுழைந்தார். பிறகு இளம் கதாநாயகனாக வளர்ந்து மிகப்பெரிய கலைஞனாக சிகரத்தை தொட்டார்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் 66 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 67 ஆண்டுகளை இன்று இப்போது ஆரம்பித்துள்ள நிலையில் நன்றி தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் நடிகர் கமல்ஹாசன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, எனது 67 ஆண்டு கால பயணத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

இந்த 67 ஆண்டுகளில் உண்மையான கற்றலாக நான் கருதுவது சுமார் 20 ஆண்டுகளை மட்டுமே. மீதமுள்ள காலம் கழிவுநீர் ஓட்டதோடு அடித்து செல்லப்பட்டதை போன்றது. இருப்பினும் ஒரு நம்பிக்கை தரும் விஷயம் என்னவென்றால் அந்த நீரோட்டம் எவ்வளவு இருண்டதாக இருந்தாலும் கூட்டு சினிமா என்ற அந்த மாபெரும் வடிவத்தின் உடனான அதாவது எல்லையற்ற ஒரு கடலுடன் ஆன சங்கமத்திற்காக காத்திருப்பபதே அது.

- Advertisement -

கலைஞர்கள் ரசிகர்கள் என நாம் அனைவரும் அதை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கிறோம். எனவே இந்த துறையில் எனது ஆண்டுகளை மக்கள் கணக்கிடுவதை நிறுத்திவிட்டு வேறு இடங்களில் சிறந்த எண்களை தேட தொடங்கும் முன்பாக அனுபவமாக நான் சேகரித்து வைத்திருப்பதை இன்னும் மேம்படுத்திக்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

டிசம்பர் 1895ல் லுமியர் சகோதரர்களின் முதல் பொது திரைப்பட காட்சிக்கு பிறகு திரைப்படத்துறை சுமார் 130 ஆண்டுகள் 8 மாதங்களாக இயங்கி வருகிறது. இந்த மொத்த வரலாற்றில் 67 ஆண்டுகள் அதாவது பாதிக்கும் மேற்பட்ட காலம் இதில் பயணித்திருக்கிறேன் என்பதை என் குழுவினர் எனக்கு நினைவூட்டினர். எனது சொந்த கணக்கின்படி உண்மையான கற்றலாக நான் உரிமை கொண்டாடக் கூடியது சுமார் 20 ஆண்டுகள் மட்டுமே. திரைத்துறையை பொறுத்தவரை ஜென் இசட் தலைமுறையிலேயே மிகவும் வயதானவன் அநேகமாக நானாக தான் இருப்பேன் என்று நடிகர் கமல்ஹாசன் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்