தமிழ் சினிமாவில் 35 ஆண்டுகளுக்கு முன்பே பிரம்மாண்ட இயக்குனர் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் இயக்குனர் ஷங்கர். ஜென்டில்மேன் முதல்வன் அந்நியன் ஐ சிவாஜி எந்திரன் ஜீன்ஸ் போன்ற அவரது படங்கள் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடப்படும் முக்கிய படங்களாக இருந்து வருகின்றன.
கடந்த ஆண்டுகளில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 கேம் சேஞ்சர் ஆகிய 2 படங்களும் அவரது முந்தைய படங்களைப் போல பெரிய அளவில் வரவேற்பை பெறாத நிலையில் அடுத்து வேள்பாரி என்ற வரலாற்று நாவலை 3 பாகங்கள் கொண்ட பிரமாண்ட திரைப்படமாக உருவாக்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். இவர் நடிகர் கார்த்தி ஜோடியாக விருமன் என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்திலும் கதாநாயகியாக நடித்தார். அடுத்து நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளியுடன் நேசிப்பாயா என்ற படத்திலும் நடித்திருந்தார்.
இப்போது அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் நடிகர் அர்ஜூன் தாஸ் உடன் இணைந்து ஒன்ஸ்மோர் என்ற படத்தில் அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார். ஒன்ஸ்மோர் திரைப்படம் வருகிற 28ம் தேதி வெளியாக உள்ளது. மாஸ்டர் கைதி விக்ரம் போன்ற படங்களில் வில்லன் மற்றும் முக்கிய கேரக்டர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அர்ஜூன் தாஸ். அநீதி ரசவாதி போர் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
குட்நைட் லவ்வர் போன்ற படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் ஒன்ஸ்மோர் படத்தை தயாரித்துள்ளது. ஒன்ஸ்மோர் திரைப்படம் வருகிற 28ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை அதிதி ஷங்கர் கூறியதாவது. ஒன்ஸ்மோர் படத்தின் கதையும் அதில் காட்டப்பட்ட காதலும் வித்தியாசமானது.
நான் கடந்த நான்கு ஆண்டுகளில் நான்கு படங்களில் மட்டுமே நடித்துள்ளேன். நிறைய படங்களில் இஷ்டத்துக்கு தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். நல்ல கதைகளில் நடிக்கவே விரும்புகிறேன். ஒன்ஸ்மோர் படத்தில் என்னைவிட அர்ஜூன் தாஸூக்கு நடிகை சோனாவுடனான கெமிஸ்ட்ரி காட்சிகள் தான் நன்றாக உள்ளன. இந்தப் படம் குடும்பத்துடன் பார்க்கும் காதல் நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்டுள்ளது என்று நடிகை அதிதி ஷங்கர் கூறினார்.





