- Advertisement -
Homeபொழுதுபோக்குநக்மாவுக்கு என்ன டிரஸ் தருவது? மீண்டும் படம் டைரக்‌ஷன் செய்யாதது ஏன்? - நடிகர் சத்யராஜ்...

நக்மாவுக்கு என்ன டிரஸ் தருவது? மீண்டும் படம் டைரக்‌ஷன் செய்யாதது ஏன்? – நடிகர் சத்யராஜ் சொன்ன கசப்பான அனுபவ பாடம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சட்டம் என் கையில் படத்தில் வில்லனாக நடித்து நடிகராக அறிமுகமானவர் சத்யராஜ். பிறகு பல படங்களில் வில்லனாக மிரட்டிய அவர் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கடலோர கவிதைகள் படம் மூலமாக ஹீரோவாக மாறினார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்தார்.

குறிப்பாக அமைதிப்படை திருமதி பழனிசாமி ரிக்‌ஷா மாமா பிரம்மா நடிகன் என பல படங்கள் சத்யராஜூக்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத் தந்தது. அதன்பிறகு ஒரு கட்டத்தில் குணச்சித்திர நடிகராக மாறிய அவர் அப்பா அண்ணன் டாக்டர் போலீஸ் அதிகாரி போன்ற கேரக்டர்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

- Advertisement -

கடந்த 1990களில் சத்யராஜ் டைரக்‌ஷன் செய்த படம் வில்லாதி வில்லன். இதில் 3 வேடங்களில் சத்யராஜ் நடித்திருந்தார். இதில் நக்மா ராதிகா கவுண்டமணி விசித்ரா மணிவண்ணன் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. எனினும் அதன்பிறகு நடிகர் சத்யராஜ் படம் டைரக்ட் செய்யவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சத்யராஜ் கூறியதாவது, ஒரு படத்தை டைரக்ட் செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. 125 படங்களில் நடித்து விட்டோமே? இந்த அனுபவம் போதாதா என்று நினைத்துக் கொண்டு நான் ஒரு படம் டைரக்ட் பண்ணினேன். வில்லாதி வில்லன் படத்தை நானே இயக்கி நடித்தேன். அந்த படத்தில் நக்மா தான் ஹீரோயின். அப்போதுதான் நடிகராக இருப்பது எந்த அளவுக்கு சுலபமான மற்றும் ஜாலியான விஷயம் என்பதே நான் புரிந்து கொண்டேன்.

- Advertisement -

அந்த படம் ஷூட்டிங்கில் ஒரு சீனுக்கு சேர் போடுறதா இல்ல சோபா போடுறதா என்று ஒரே குழப்பம். நான் ஒண்ணு சொல்றேன். ஆர்ட் டைரக்டர் ஒண்ணு சொல்றார். சண்டைக்காட்சிக்கு 50 பேர் வேண்டும் என ஸ்டண்ட் மாஸ்டர் கேட்கிறார். தயாரிப்பாளருக்கு 10 பேர் தான் என்றால் சந்தோஷம். அதைவிட நக்மாவுக்கு ஒரு சீன்ல புடவை கொடுக்கிறதா சுடிதார் கொடுக்கிறதா என்று வந்துச்சு பாருங்க ஒரு குழப்பம். அதனால்தான் அப்புறம் நான் படம் எதுவும் இயக்கவில்லை.

இதெல்லாம் முடிச்சுட்டு மாமன் மகள் படத்தில் நடிக்க போறோம். எனக்கு ஜோடி மீனா. என்கூட மணிவண்ணன் கவுண்டமணி அண்ணன் எல்லாம் நடிக்கிறாங்க. குரு தனபால் டைரக்சன்ல பொள்ளாச்சியில். அப்படியே அது சொர்க்கமா தெரிஞ்சது. ஏன் என்றால் ஷாட் ரெடின்னா போய் நடிப்போம். கட் சொன்னால் உட்கார்ந்து உலக கதை பேசுவோம். ஒரு படத்தை இயக்குவது ரொம்பவும் கஷ்டம். அதில் நடிப்பது ரொம்பவும் ஈஸி என்று நடிகர் சத்யராஜ் அதில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்