தமிழ் சினிமாவில் பல வாரிசு நடிகர்கள் நடிக்க வந்துவிட்டனர். ஆனால் நடிகர் சிவாஜி கணேசன் மகன் பிரபு நடிகர் முத்துராமன் மகன் கார்த்திக் ஆகியோர் தான் வாரிசு நடிகர்களில் பெரிய அளவில் தமிழ் சினிமாவில் ஜெயித்தனர் என்றால் அது மிகையல்ல. அவர்களது 1980 90 படங்கள் இன்றும் ரசிக்கப்படுகின்றன.
அதன்பிறகு எத்தனையோ வாரிசு நடிகர்கள் வந்த போதிலும் கார்த்திக் பிரபு போல பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. அந்த வரிசையில் நடிகர் சிவக்குமார் மகன்கள் சூர்யா கார்த்திக் இருவரும் பெரிய நட்சத்திர நடிகர்களாக வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் பிரபு மகன் விக்ரம் பிரபு கார்த்திக் மகன் கெளதம் கார்த்திக் இன்னும் பெரிய வெற்றிக்காக போராடிக்கொண்டு தான் இருக்கின்றனர்.
நடிகர் கார்த்திக் கடந்த 20 ஆண்டுகளாக நடிப்பில் பெரிய அளவில் காண முடியவில்லை. சில படங்களில் மட்டுமே கார்த்திக் நடித்த நிலையில் சமீபமாக அவர் நடித்த படங்களே இல்லை என்று சொல்லலாம். ஆனால் பிரபு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். பல படங்களில் அப்பா கேரக்டர் மற்றும் போலீஸ் அதிகாரி கேரக்டரில் அவர் நடிக்கிறார்.
அதனால் நடிகர் பிரபுவை பொருத்த வரை தொடர்ந்து சினிமாவில் இருந்து வருகிறார். அவர் படங்களில் நடிப்பது மட்டுமின்றி விளம்பர படங்களிலும் ஏராளமாக நடிக்கிறார். இப்போது பிரபு தனக்கு சிறந்த நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரைட்டர் பட இயக்குனர் பிராங்ளின் இயக்கத்தில் உருவாகும் ஒரு புதிய படத்தில் பிக்பாஸ் பிரபலம் விஜய் வர்மா ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் பிரபுவும் நடிக்க உள்ளார். ஆனால் இந்த படத்தில் இதுவரை இல்லாத ஒரு கேரக்டரில் பிரபு நடிக்கிறார்.
அதாவது இந்த படத்தில் நடிகர் பிரபு ஒரு சைக்கோ கேரக்டரில் மிரட்டலாக நடிக்க உள்ளார். இது வில்லன் கேரக்டர் போலவும் இருக்க வாய்ப்புள்ளது. இதுவரை மென்மையான பாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் பிரபு. இளைய திலகம் என்று அழைக்கப்பட்ட பிரபு இனி வில்லன் ஜானரில் நடிப்பது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை தந்துள்ளது.





