- Advertisement -
Homeபொழுதுபோக்குமக்களுக்கான எல்லா திட்டங்களுமே ஓட்டை வாளியில் ஊற்றிய தண்ணீர் தானா? தேர்தல் வாக்குறுதிகளில் தொடர்ந்து டிமிக்கி...

மக்களுக்கான எல்லா திட்டங்களுமே ஓட்டை வாளியில் ஊற்றிய தண்ணீர் தானா? தேர்தல் வாக்குறுதிகளில் தொடர்ந்து டிமிக்கி தரும் தவெக அரசு – விரக்தியடைந்த தமிழக மக்கள்!

- Advertisement -

தமிழகத்தை கடந்த 60 ஆண்டு காலமாக திராவிட இயக்கங்களான அதிமுகவும் திமுகவும் மாறி மாறி ஆட்சி செய்து வந்த நிலையில் நாட்டில் ஊழல் லஞ்சம் பெருகியது. மக்களின் வறுமை தீரவில்லை. வேலை இல்லா திண்டாட்டம் ஓயவில்லை. விலைவாசி குறையவில்லை. அடித்தட்டு மக்களின் வாழ்க்கை மாறவில்லை.

ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிமுக திமுக என மாறி மாறி ஓட்டு போட்டு போட்டு தமிழக மக்களும் பலத்த ஏமாற்றமடைந்தனர். ஆளும்கட்சிகளின் அநியாயத்தை தட்டி கேட்க வேண்டிய மற்ற அரசியல் கட்சிகளும் தேர்தல் கூட்டணி தர்மத்தால் 5 ஆண்டுகளும் வாய்மூடி அமைதி காத்ததால் எதுவுமே நன்மை நடக்கவில்லை. மக்களும் நம்பிக்கை இழந்து விரக்தியில் இருந்தனர்.

- Advertisement -

அதனால் அரசியல் மாற்றம் வேண்டும் என்ற ஒரே காரணத்தால் திமுக அதிமுக இரண்டுமே வேண்டாம் என்றுதான் புதிதாக அரசியல் களத்துக்கு வந்த தவெக கட்சிக்கு முழுமையாக ஆதரவு தந்தனர். தனித்து போட்டியிட்ட நடிகர் விஜயை 108 இடங்களில் அதிக ஓட்டுகளில் ஜெயிக்க வைத்தனர். ஊர் பேர் தெரியாத அறிமுகமே இல்லாத வேட்பாளர்களுக்கு எல்லாம் வாக்குசாவடியில் விசில் ஊதி ஊதி ஜெயிக்க வைத்தனர்.

ஆனால் ஜெயித்து எம்எல்ஏக்களாக அமைச்சர்களாக ஆன பிறகு தவெகவினர் காட்டும் ஆட்டிட்யூட்டும் சட்டசபையில் அவர்கள் பேசுகிற விதமும் உடல் மொழியும் ஆணவப் போக்கும் ஓட்டுப்போட்ட மக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. அதிலும் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா புஸ்லி ஆனந்த் நிர்மல்குமார் ரமேஷ் ராஜ்மோகன் போன்றவர்களின் பேச்சும் நடவடிக்கைகளும் சட்டசபை மாண்பையே கேள்விக்குறியாக மாற்றிவருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

- Advertisement -

இந்த நிலையில் தமிழக முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதிகளாக சொன்னதை எல்லாம் நிறைவேற்றுவதாக கூறி ஒவ்வொரு அறிவிப்பாக வெளியிட்டு வருகிறார். ஆனால் வாக்குறுதியாக சொன்னது ஒன்று, இப்போது சட்டசபையில் அறிவிப்பது ஒன்றாக தான் அது இருக்கிறது. குறிப்பாக விவசாயிகளுக்கான கடன் முழுமையாக ரத்து, தமிழகத்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கு தங்க மோதிரம், மகளிர் இலவச பயணம், ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் இலவசம் என எந்த ஒரு அறிவிப்பிலும் மக்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கப் போவது இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகி வருகிறது.

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டும் தான் மோதிரம், 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிய விவசாயிகளுக்கு மட்டுமே முழுமையான கடன் தள்ளுபடி ஆண்டுக்கு 3 சிலிண்டர், அதுவும் ரூ. 2.5 லட்சம் மட்டுமே குடும்பத்தின் ஆண்டு வருமானம் இருக்க வேண்டும். மேலும் காஸ் சிலிண்டரை பணம் கொடுத்து வாங்கிய பிறகு பயனாளியின் வங்கி கணக்கில் அந்த தொகை வரவு வைக்கப்படும் இப்படி ஒவ்வொரு திட்டத்திலும் மறைமுகமாக நம்பி ஓட்டுப் போட்ட மக்களை தவெக அரசு நூதனமாக ஏமாற்றி வருகிறது. ஓட்டை வாளியில் ஊற்றிய நீரை போல நாளுக்கு நாள் தவெக அரசு தமிழக மக்களின் நம்பிக்கையை இழக்க துவங்கி விட்டது என்பதே கசப்பான உண்மை.

- Advertisement -

சற்று முன்