- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதல்வர் விஜயை சந்தோஷப்படுத்த அப்படி முடிவை எடுத்ததா தயாரிப்பாளர் சங்கம்? - பிரபலம் சொன்ன சீக்ரெட்,...

முதல்வர் விஜயை சந்தோஷப்படுத்த அப்படி முடிவை எடுத்ததா தயாரிப்பாளர் சங்கம்? – பிரபலம் சொன்ன சீக்ரெட், இது வேற லெவல் சம்பவமா இருக்குதே…

- Advertisement -

புதிய படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆன பிறகு 4 வாரங்கள் அதாவது சரியாக 28 நாட்கள் கழித்து ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்வது வழக்கமாக உள்ளது. இதை 8 வாரங்களாக மாற்ற வேண்டும். அதற்கு சம்மதம் சொல்லி கடிதம் தந்தால் மட்டுமே புதிய படங்களை திரையிடுவோம் என்று வினியோகஸ்தர்களும் தியேட்டர் உரிமையாளர்களும் நிபந்தனை விதித்துள்ளனர்.

ஆனால் தியேட்டரில் படம் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகு தான் ஓடிடியில் ரிலீஸ் என்றால் ஓடிடி தளங்கள் பெரிய விலை கொடுத்து படங்களை வாங்காது. அதனால் திரைப்பட தயாரிப்பாளர்கள் பலத்த நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பதால் இந்த நிபந்தனைக்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சம்மதிக்கவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் இணைந்து ஒரு அதிரடி முடிவை அறிவித்துள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் 1ம் தேதி முதல் தமிழில் புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாது. படப்பிடிப்பு எதுவும் நடக்காது. மேலும் படப்பிடிப்பு சார்ந்த பணிகள் போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் எதுவுமே நடக்காது என அறிவித்துள்ளது.

இதனால் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ரிலீஸ் ஆக தயாராக உள்ள படங்கள் ரிலீஸ் செய்ய முடியாது. மேலும் அந்த படங்களின் போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகளும் நடக்காது என்பதால் பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும். இதற்கிடையே தர்மன் அரசன் சேயோன் உள்ளிட்ட பல படங்கள் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகின்றன.

- Advertisement -

மேலும் ஜெயிலர் 2 சர்தார் 2 மண்டாடி டிமாண்டி காலனி 3 ராவடி சிக்மா உள்ளிட்ட பல படங்கள் ரிலீஸ் செய்யப்பட உள்ளன. இப்படிப்பட்ட சூழலில் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ள இந்த ஸ்டிரைக் பெரிய அளவில் ஏமாற்றத்தை குழப்பத்தை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரசிகர்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இதற்கிடையே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் 2 படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் தடுத்தால் அதன் மூலம் தமிழக முதல்வர் விஜய் சந்தோஷப்படுவார் என்பதற்காக இப்படி ஒரு முடிவை தயாரிப்பாளர் சங்கம் எடுத்தார்களா என்கிற ஒரு தகவல் இருப்பதாகவும் மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறியிருப்பதும் பெரிய அளவில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.

- Advertisement -

சற்று முன்