திரைப்படங்களை பொருத்த வரை ஒரு நடிகரை ரசிகர்களுக்கு முதலில் அறிமுகம் செய்பவர் இயக்குனர்தான். அப்படி தான் இன்றைய உச்ச நட்சத்திரங்களான ரஜினி கமல் போன்றவர்கள் திரையில் தோன்றினார்கள். நடிகர் விஜயை சினிமாவில் அறிமுகம் செய்தவர் அவரது தந்தை இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர். விஜய் இப்போது தமிழக முதல்வரே ஆகி விட்டார்.
தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனர் சிகரமாக வாழ்ந்து மறைந்தவர் கே பாலசந்தர். தமிழ் சினிமாவில் அவர் இயக்கிய படங்களும் அவர் உருவாக்கி தந்த கதாபாத்திரங்களும் அவரது கதைகளில் நடித்த நடிகர் நடிகைகளும் புடம்போட்ட தங்கம் போல திரையில் பிரகாசித்தனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
அந்த வரிசையில் இயக்குனர் கே பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்கள் பலர். அதே போல் அவரது இயக்கத்தில் திரையில் நடிகராக நடிகையாக அறிமுகமானவர்கள் பலர். அதில் குறிப்பிட்ட 15 பேர் மட்டுமே மிகப்பெரிய அளவில் தமிழ் சினிமாவில் நட்சத்திரங்களாக ஜொலித்தனர்.
அந்த வகையில் இயக்குனர் கே பாலசந்தர் படத்தில் அறிமுகம் செய்தவர்களின் முக்கியமான நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த். தனது அரங்கேற்றம் படத்தில் கமலையும் அபூர்வ ராகங்கள் படத்தில் நடிகர் ரஜினியையும் கே பாலசந்தர் அறிமுகம் செய்தார்.
அடுத்து நடிகர்கள் பிரகாஷ் ராஜ் விவேக் மேஜர் சுந்தர்ராஜன் ஜெய் கணேஷ் சிவச்சந்திரன் டெல்லி கணேஷ் திலீப் எஸ்வி சேகர் ராதாரவி ஆகிய நடிகர்களை சினிமாவில் அறிமுகம் செய்தவர் இயக்குனர் கே பாலசந்தர் தான். அதே போல் சில முன்னணி நடிகைகளும் அவரது படங்களில்தான் அறிமுகமாகி பின்னர் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்தனர்.
அந்த வரிசையில் நடிகைகள் சுஜாதா சரிதா மற்றும் படாபட் ஜெயலட்சுமி போன்றவர்கள் கே பாலசந்தர் இயக்கத்தில் அறிமுகத்தில் நடித்தவர்கள்தான். இப்படி தமிழ் சினிமாவுக்கு பல நல்ல திரை நட்சத்திரங்களை கொண்டு வந்தவர் என்ற பெருமை இயக்குனர் கே பாலசந்தருக்கு உண்டு. இந்த வரிசையில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் 15க்கும் மேற்பட்ட புதுமுக நடிகர்களை அறிமுகப்படுத்தி அவர்களை நட்சத்திரங்களாக ஜொலிக்க வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





