- Advertisement -
Homeபொழுதுபோக்குபிறந்த நாள் அன்னிக்கு கேப்டன் விஜயகாந்த் செஞ்ச அந்த ஒரு சம்பவம் - நேர்ல பார்த்த...

பிறந்த நாள் அன்னிக்கு கேப்டன் விஜயகாந்த் செஞ்ச அந்த ஒரு சம்பவம் – நேர்ல பார்த்த நான் மிரண்டு போயிட்டேன், நடிகர் ஜெயப்பிரகாஷ் சொன்ன தகவல்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒரு பக்குவப்பட்ட பண்பட்ட குணச்சித்திர நடிகராக தன்னை பல படங்களில் வெளிப்படுத்தி வருபவர் நடிகர் ஜெயப்பிரகாஷ். இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் படத்தில் அப்பா கேரக்டரில் ஜெயப்பிரகாஷ் நடித்திருப்பார். சில காட்சிகளில் வந்தாலும் அவரது நடிப்பு மனதில் நிற்கும்படி இருந்தது.

தொடர்ந்து பல படங்களில் ஹீரோ அல்லது ஹீரோயின் அப்பாவாக ஜெயப்பிரகாஷ் நடித்து வருகிறார். சில படங்களில் வில்லன் கேரக்டரிலும் அவர் நடித்திருக்கிறார். எந்த கேரக்டர் என்றாலும் அவரது சிறந்த நடிப்பு ரசிகர்களின் மனதை கவர்கிறது. குணச்சித்திர நடிப்பில் ஜெய் கணேஷ் டெல்லி கணேஷ் பிரகாஷ் ராஜ் போல ஜெயப்பிரகாஷூம் தனித்து தெரிகிறார்.

ஜெயப்பிரகாஷ் நடிகராவதற்கு முன்பு சில படங்களை அவரே தயாரித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் ஜெயப்பிரகாஷ் கூறியதாவது, விஜயகாந்த் நடித்த தவசி படத்தை நான்தான் தயாரித்தேன். நான்தான் அந்த படத்தின் தயாரிப்பாளர்.

படப்பிடிப்பு நடந்த போது அடுத்த நாள் ஆகஸ்ட் 25ம் தேதி புரட்சி கலைஞர் விஜயகாந்தின் பிறந்தநாள். அதற்கு முந்தைய நாள் விஜயகாந்த் என்னிடம் வந்து நாளை எனக்கு பிறந்தநாள் நாள். ஒரு நாள் மட்டும் படப்பிடிப்பை நிறுத்திக் கொள்ளலாமா என்று கேட்டார். நானும் அதற்கு ஓகே சார் என்று சம்மதம் சொல்லிவிட்டேன். மறுநாள் காலையில் அவர் தங்கி இருந்த ஓட்டலில் பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரைக் காணவும் நேரில் பிறந்தநாள் வாழ்த்து சொல்லவும் வந்து விட்டனர்.

கிலோ மீட்டர் கணக்கில் வரிசையில் ரசிகர்கள் அவரை பார்க்க காத்திருக்கின்றனர். அன்று காலை முதல் அவர் ரசிகர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். வருகிற ஒவ்வொரு ரசிகருடனும் தனித்தனியாக நின்று அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொள்ள ரசிகர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். அவர் தனது பிறந்த நாளில் புது டிரஸ் அணியவில்லை, டிபன் சாப்பிட வில்லை டீ காபி கூட குடிக்கவில்லை.

தொடர்ந்து தனது ரசிகர்களை சந்தித்துக் கொண்டே இருக்கிறார். அவர்களும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். காலையில் 8 மணிக்கு துவங்கியது இரவு 8 மணி ஆன பிறகும் நீடித்தது. இப்படி தொடர்ந்து 12 மணி நேரம் தனது ரசிகர்களுக்காக கேப்டன் நேரம் ஒதுக்கி புகைப்படம் எடுத்துக் கொண்டதை பார்த்தபோது நான் அப்படியே மிரண்டு போய் விட்டேன். இப்படி ஒரு நடிகரை மனிதரை நான் பார்த்ததே இல்லை என்று நடிகர் ஜெயப்பிரகாஷ் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

சற்று முன்