- Advertisement -
Homeபொழுதுபோக்கு4 மொழிகளில் 4 ஹீரோக்கள் கலக்கப் போகும் பிக்பாஸ் சீசன் - தமிழ் தெலுங்கு கன்னடம்...

4 மொழிகளில் 4 ஹீரோக்கள் கலக்கப் போகும் பிக்பாஸ் சீசன் – தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் பிரமோஷனில் அமர்க்களம் காட்டி அசத்திய நாயகர்கள்!

- Advertisement -

எப்போதுமே அடுத்த வீட்டிலோ எதிர்த்த வீட்டிலோ அல்லது பக்கத்து வீட்டிலோ சண்டையோ சச்சரவோ பிரச்னையோ நடந்தால் பார்ப்பவர்களுக்கு அது சுவாரசியமாக இருக்கும். அதிலும் குறிப்பாக தெருவில் நடக்கும் சண்டை குழாயடி சண்டைகளை பார்ப்பதற்கு ஒரு கூட்டமே திரண்டு விடும்.

இந்த கான்செப்ட்டை மையமாக வைத்து ஒரு வீட்டுக்குள் 20 முதல் 25 பேரை 100 நாட்கள் தங்க வைத்து அவர்களுக்குள் சண்டையும் மூட்டி விட்டு அதை மூலைக்கு மூலை கேமராக்கள் வைத்து அதை மக்களுக்கு காட்டி அவர்களை குஷிப்படுத்தும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக்பாஸ் ஷோ. இது மக்களிடம் பெரிய வரவேற்பை பல ஆண்டுகளாக பெற்று வருகிறது.

- Advertisement -

அதன்படி விஜய் டிவி சார்பில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி வரும் 6ம் தேதி துவங்க உள்ளது. அன்று மாலை 6 மணிக்கு பிக்பாஸ் போட்டியாளர்களை அறிமுகம் செய்து வைத்து நடிகர் விஜய் சேதுபதி வீட்டுக்குள் அனுப்பி வைக்க உள்ளார். வரும் 6ம் தேதி முதல் 100 நாட்களுக்கு மேல் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற உள்ளது.

இதே போல் வருகிற 6ம் தேதி முதல் மலையாளம் கன்னடம் தெலுங்கு மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்க உள்ளது. இதில் மலையாளத்தில் நடிகர் மோகன்லால் தெலுங்கில் நடிகர் நாகர்ஜூனா கன்னடத்தில் நடிகர் கிச்சா சுதீப் ஆகியோர் தொகுப்பாளராக பங்கேற்று நடத்த உள்ளனர். இதை 4 பேரும் நடித்த ஒரு பிரமோ வீடியோ வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

- Advertisement -

ஒரு ஓட்டலில் நடிகர்கள் மோகன்லால் கிச்சா சுதீப் நாகர்ஜூனா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் தங்கியுள்ளனர். தங்களுக்கான உணவுகளை ஆர்டர் செய்கின்றனர். இதில் இட்லி சாம்பார் வடை புட்டு கடலை கறி என அவரவர் மாநில பிரபல உணவுகளை ஆர்டர் செய்கின்றனர். ஆனால் அவர்கள் ஆர்டர் செய்த உணவு வகைகள் ஒருவருக்கு ஒருவர் மாறி பரிமாறப்படுகிறது.

அப்போதும் அதை அவர்கள் மாறி வந்த உணவுகளை சுவைத்து பார்த்து நல்லா இருக்கே என்று ரசித்து சாப்பிடுகின்றனர். இந்த வீடியோவில் அவரவர் கேட்ட அவர்கள் விரும்பிய உணவு வகை மாறினாலும் ஒரே நேரத்தில் 4 மொழிகளிலும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியும் அதிக சுவையுடன் இருக்கும். மற்ற மொழிகளிலும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் ரசிக்கலாம் என்பது போல அந்த வீடியோவில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிரமோசன் செய்து அசத்தியிருக்கின்றனர். இது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

- Advertisement -

சற்று முன்