- Advertisement -
Homeபொழுதுபோக்குஎல்லா கேள்விக்கும் பதில் சொல்வேன், அப்போது யாரும் ஓடக்கூடாது - சொல்லிவிட்டு முதல் ஆளாய் வெளியே...

எல்லா கேள்விக்கும் பதில் சொல்வேன், அப்போது யாரும் ஓடக்கூடாது – சொல்லிவிட்டு முதல் ஆளாய் வெளியே சென்ற முதல்வர் விஜய்!

- Advertisement -

தமிழக முதல்வராக உள்ள விஜய் சட்டசபையில் பெரும்பாலும் பேசாமல் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருப்பது கடந்த 100 நாட்கள் ஆட்சியில் தொடர்ந்து நடந்து வருகிறது. ஏதாவது சிறப்பு தீர்மானமோ அல்லது 110 விதியின் கீழ் ஏதாவது தீர்மானம் இருந்தால் மட்டுமே வாசிப்பார். மற்றபடி கைகளை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருப்பார்.

அதிலும் முதல்வரான அவரது கட்டுப்பாட்டில் உள்ள துறைகள் சார்ந்த கேள்விகளுக்கும் அவர் பதில் சொல்ல மாட்டார். அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா ராஜ்மோகன் நிர்மல்குமார் போன்றவர்கள் ஆவேசமாக எழுந்து பதில் அளிப்பார்கள். அதுவும் உங்க திமுக அதிமுக ஆட்சியில் எப்படி இருந்தது? என்ற அபத்தமான கேள்வியை திரும்ப திரும்ப கேட்பார்கள்.

- Advertisement -

மாற்றத்தை எதிர்பார்த்து விசிலுக்கு வாக்களித்த மக்கள், இப்போது 100 நாட்களே இந்த லட்சணத்தில் இருக்கிறது? இன்னும் 4.5 ஆண்டுகளை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று புலம்பத் துவங்கி விட்டனர். அதிலும் விலைவாசி உயர்வை கூட கட்டுப்படுத்தாத முயற்சிக்காத ஒரு வேடிக்கை தவெக அரசாக இது மாறி வருகிறது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இன்று தமிழக சட்டசபையில் பேசிய முதல்வர் விஜய், இங்கே சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்கிற அனைத்து கேள்விகளுக்கும் திங்கட்கிழமை பதில் அளிக்கிறேன். எல்லா கேள்விகளும் என் கவனத்துக்கு வந்துவிடும். ஆனால் ஒரு கோரிக்கை. அப்படி நான் பதில் சொல்லும் போது யாரும் சபையை விட்டு வெளியே ஓடக்கூடாது என்று ஒரு வித கிண்டலாக பேசிவிட்டு அமர்ந்தார். பிறகு அவரே சில விநாடிகளில் எழுந்து வெளியே வேகமாக சென்று விட்டார்.

- Advertisement -

அப்போது பேசிய திமுக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், கேட்கிற கேள்விகளுக்கு இப்போதே பதில் சொல்ல வேண்டியதுதானே? சரி 3 நாட்கள் இருக்கிறது, நன்றாக பிரிப்பேர் செய்துவிட்டு வாருங்கள் என்று கூறினார். மேலும் எங்களை யாரும் வெளியே ஓடிவிடக் கூடாது என்று சொன்ன முதல்வர், அவர்தான் இப்போது முதல் ஆளாக வெளியே போயிருக்கிறார் என்பதையும் சுட்டிக் காட்டினார்.

கேட்கிற கேள்விளுக்கு சரியாக பதில் சொல்ல தெரியாது. வழக்கம் போல் ஸ்கிரிப்ட் எழுதிக்கொண்டு அதை படிக்கப் போகிறார். குறிப்பாக திமுக தான் எல்லா பிரச்னைக்கு காரணம், அவர்களே குற்றவாளி என்று அம்பை ஏவிய பக்கமே திருப்பி விடப் போகிறார். இதற்கு ஏன் இந்த ஓவர் பில்டப்பு? ஒரு முதல்வராக இருந்துக்கொண்டு நான் பதில் சொல்லும் போது யாரும் வெளியே ஓடக்கூடாது என்று சொல்வதெல்லாம் மாண்புக்குரிய நாகரிகமான பேச்சு இல்லை சிஎம் சார் என்று இணையத்தில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்