- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் சுதந்திரங்களில் அவர் தலையிடுவதில்லை, ஆனால் எனக்கு அவர் பாதுகாப்பு வலையாக இருந்து வருகிறார் -...

என் சுதந்திரங்களில் அவர் தலையிடுவதில்லை, ஆனால் எனக்கு அவர் பாதுகாப்பு வலையாக இருந்து வருகிறார் – நடிகர் துல்கர் சல்மான் உருக்கம்!

- Advertisement -

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக இருப்பவர் நடிகர் மம்முட்டி. 70 வயதுகளை கடந்தும் இப்போதும் ஹீரோவாக நடித்துக்கொண்டு இருக்கிறார். சமீபத்தில் பிரம்மயுகம் என்ற படத்தில் நடித்ததற்காக நடிகர் மம்முட்டிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். மலையாள சினிமாவில் அறிமுகமாகி இப்போது பான் இந்தியா நடிகராக வலம் வருகிறார். தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என பல மொழிகளில் துல்கர் சல்மான் நடித்த படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகின்றன.

- Advertisement -

அதனால் தென்னிந்திய சினிமாவில் ஒரு நட்சத்திர நடிகராக வலம் வருகிறார் துல்கர் சல்மான். குறிப்பாக தெலுங்கு சினிமாவில் துல்கர் சல்மான் படங்களுக்கு தனி வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள ஐயம் கேம் என்ற திரைப்படம் தற்போது ரிலீசாகி உள்ளது. இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் நடிகர் துல்கர் சல்மான் பங்கேற்று பேசி வருகிறார். இதில் தனது தந்தை நடிகர் மம்முட்டி குறித்து சில விஷயங்களை வெளிப்படையாக துல்கர் சல்மான் பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

நடிகர் மம்முட்டி குறித்து நடிகர் துல்கர் சல்மான் கூறியதாவது, எனது தந்தை என் வாழ்க்கையில் எப்போதும் அளவுக்கு அதிகமாக தலையிடுவதில்லை. நீயே சூழ்நிலையை கையாளு. வெற்றியைப் பெறு. எல்லாமே உன்னால் தான் நடக்க வேண்டும் என்று எனக்கு பரிபூரணமாக சுதந்திரம் தந்திருக்கிறார். அதே சமயம் ஏதேனும் தவறு நடந்தாலோ அல்லது எனக்கு சிக்கல் ஏற்பட்டாலோ எனக்கு பின்னால் ஒரு பாதுகாப்பாக அரணாக இருக்கவும் அவர் தயாராக இருக்கிறார்.

அப்படி என்னை பாதுகாக்க அரணாக தயாராக இருப்பதாக அவரே என்னிடம் கூறியிருக்கிறார். குறிப்பாக சர்க்கஸ் கயிற்றில் நடப்பவர்கள் கீழே விழுந்தால் காப்பாற்ற ஒரு பாதுகாப்பு வலை இருக்குமே? அதுபோல்தான் என் தந்தை எனக்கு பாதுகாப்பான ஒருவராக எப்போதுமே இருந்து வருகிறார் என்று நடிகர் துல்கர் சல்மான் அப்போது நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்